சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாலமாக இருக்கவேண்டும்.. பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது.. தெற்கு ரயில்வேக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: அலுவலகங்களில் தமிழில் பேசக்கூடாது என உத்தரவு பிறப்பித்த தெற்கு ரயில்வே துறையை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

அண்மையில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட மொழிப் பிரச்சனையால் மதுரையில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் இயக்கப்பட்டன. இதனால் நேர இருந்த கோர விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் தமிழில் பேசக்கூடாது என தெற்கு ரயில்வே இன்று அறிக்கை மூலம் உத்தரவிட்டது. அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தெற்கு ரயில்வேயை கண்டித்து நெட்டிசன்களுகம் டிவிட்டியுள்ளனர்.

தமிழகத்தில் தமிழில் பேச தடையா... தெற்கு ரயில்வே துறைக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்! தமிழகத்தில் தமிழில் பேச தடையா... தெற்கு ரயில்வே துறைக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்!

தமிழகத்தில் தமிழுக்கு தடையா?

தெற்கு ரயில்வே.. உங்கள் சேவையின் மீது நாங்கள் வைத்திருந்த மரியாதையை நீங்கள் இழந்துவிட்டீர்கள்! எந்த பிராந்திய மொழியையும் அவர்களின் சொந்த ஊரில் நீங்கள் தவிர்க்க முடியாது... தமிழகத்தில் தமிழுக்கு தடையா??? நான் தமிழன் அல்ல இருந்தாலும் என்னால் இது ஜீரணிக்கவும் முடியவில்லை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. உங்கள் அறிவிப்பை திரும்ப பெறுவீர்கள் என நம்புகிறேன்.. இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்

தமிழை கற்றுக்கொடுங்கள்

என்னது இது? இந்த அறிக்கை தமிழகத்தில் தமிழ் பயன்படுத்த கூடாது என்கிறது. முறையான தகவல் பரிமாற்றம் வேண்டும் என்றால், மற்றவர்களை இந்தியும் ஆங்கிலமும் பயன்படுத்த சொல்வதற்கு பதில் பணியில் அமர்த்தியுள்ள உங்கள் பணியாளர்களுக்கு தமிழை கற்றுக்கொடுங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்

பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது

டியர் தெற்கு ரயில்வே.. எங்கள் சொந்த மொழியை பயன்படுத்துவதால் உங்களுக்கு என்ன பாதிப்பு என்பதை தெரியப்படுத்துங்கள். உங்களை போன்ற அரசு ஊழியர்கள் மக்களையும் அரசாங்கத்தையும் இணைக்கும் பாலாமாக இருக்கவேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. நீங்கள் மக்களால் மக்களுக்காக அரசாங்கத்தை அமைத்துள்ளீர்கள்.

பிராந்திய மொழியை பயன்படுத்துங்கள்

தெற்கு ரயில்வேயில் மொழிப்பெயர்ப்பு துறையை உருவாக்குங்கள். அதன்மூலமாக உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் பிராந்திய மொழியில் பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்

தமிழ் தெரிந்தவர்களை அமர்த்துங்கள்

டியர் ரயில்வே அமைச்சகமே.. முதலில் பிராந்திய மொழி தெரியாத நபதை ஸ்டேஷன் மாஸ்டராக ஏன் பணியில் அமர்த்தினீர்கள்? அவர்கள் இங்கு வேலை செய்ய வேண்டுமானால் இங்குள்ள மொழியை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் இல்லையெனில் தமிழ் தெரிந்தவர்களை பணியில் அமர்த்துங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்

English summary
Netizens condemns Southern railway for banning Tamil in office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X