• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி".. சீமான் தெரியாத்தனமா பேசிட்டாரே.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

|

சென்னை: "ஆண்டவா ஒன்னு இவரை ஊமையாக்கிரு, இல்ல எங்களை எல்லாம் செவிடு ஆக்கிரு" என்றும்,"ஒருத்தர் செத்துட கூடாதே, எங்க சின்னராசுவை கையிலேயே பிடிக்க முடியாது" என்றும் எஸ்பிபி குறித்து சீமான் கூறிய கருத்தை பலர் கிண்டல் செய்து வருகின்னர்.. அதேநேரம் ஆதரவு குரல்களும் சீமானுக்கு எழுந்தபடியே இருக்கிறது.

நேற்று சீமான் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில் அவர் பேசும்போது, "முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தை இலங்கை மொழியில் எடுத்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்கள் தமிழ் பிள்ளை விஜய் சேதுபதியை வைத்து தமிழில் எடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

விஜய் சேதுபதியின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் எங்களது பேச்சில் அறிவுறுத்தல் இருந்ததே தவிர அச்சுறுத்தல் இல்லை.. மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்துக்கு இலங்கை கச்சேரியில் பாட வாய்ப்பு வந்தபோது எதிர்ப்பு வருமோ என்று நினைத்து, "போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி" என்று என்னிடம் கேட்டார்"என்று சீமான் தெரிவித்திருந்தார்.

மனுதர்மத்தை எழுதும்போது கூடவே உட்கார்ந்து எழுதினவரு குஷ்பு... சீமான் செம்ம நக்கல்!

 கமெண்ட்

கமெண்ட்

நேற்றில் இருந்து எஸ்பிபி குறித்து சீமான் பேசியதுதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. பலர் இதுகுறித்து கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.. "இதென்ன பிரமாதம்.. இளையராஜாவே ஒவ்வொரு பாட்டுக்கும் என்கிட்ட கேட்டுட்டுதான் ட்யூனே போடுவாரு, என்றும், "பிரபாகரன் அவர்களிடம் துப்பாக்கி பயிற்சி பெற்றது போல்... சிவாஜிக்கு நடிப்பு சொல்லி கொடுத்தது போல்.. இதுவும் ஒரு வரலாற்று நிகழ்வு" என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

கிண்டல்

கிண்டல்

"ஆண்டவா ஒன்னு அவரை ஊமையாக்கிரு, இல்ல எங்களை எல்லாம் செவிடு ஆக்கிரு" என்றும்,"ஒருத்தர் செத்துட கூடாதே, எங்க சின்னராசுவை கையிலேயே பிடிக்க முடியாது" என்றும் கிண்டல் செய்து வருகின்றனர். "அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா பாடலை எஸ்பிபி பாடுவதற்கு எம்ஜியாரிடம் சிபாரிசு செய்தவர் எங்கள் சீமான் தான், முதல்ல அந்த பாட்டில் 500 நிலவே வா என்றுதான் இருந்தது.. சீமான்தான் ஒரு ரவுண்டா இருக்கட்டுமேன்னு ஆயிரம்ன்னு திருத்தி தந்தாரு" என்றும் நக்கல் அடித்து வருகின்றனர்.

 கேள்விகள்

கேள்விகள்

இருக்கும்போது சொல்லாமல், எஸ்பிபி இறந்தபிறகு சீமான் ஏன் இதை சொல்கிறார் என்று கேள்வி எழுப்பினாலும், ஒரு சிலர் இதை ஆதரிக்கவே செய்கின்றனர்.. "எஸ்பிபியை போற்றுவதே நம் கடமை.. அவரது இறுதி பயணத்தை அரசு மரியாதையோடு அனுப்பி வைப்பதே நமது பெருமை" என்று எஸ்பிபி இறந்தபோது அறிக்கை விட்டவர் சீமான்.. ஒரே துறை என்பதால் நெருக்கமான உறவு இருந்திருக்கலாம்.. அது தெரியாமல் எப்படி இல்லை என்று ஒரேடியாக சொல்ல முடியும் என்று ஆதரவான குரலும் எழுகின்றன.

குணம்

குணம்

இதுகுறித்து நடுநிலையாளர்கள் பேசம்போது, "இப்படி ஒரு இனத்தை மதிப்பது மற்றும் ஒருவரின் உணர்வுகளை மதிக்கும் குணம் எஸ்பிபியிடம் இயல்பிலேயே இருந்துள்ளது.. அதனால் நிச்சயம் அப்படி சீமானிடம் கேட்டிருக்கவே செய்யலாம். அதேசமயம், இதை சீமானிடம் எஸ்பிபி ஒன்றும் பயத்தால் கேட்டிருக்க வாய்ப்பில்லை.. மாறாக ஒரு மரியாதையுடன்தான் கேட்டிருக்கிறார்.. இதைகூட விஜயசேதுபதி செய்யவில்லையே.. அவருக்கு பணம்தானே முக்கியமா போயிடுச்சு.. இந்த விஷயத்தில் சீமான் சொல்றதும் உண்மையே, எஸ்பிபியும் அப்படி கேட்டிருக்கவே செய்யலாம்" என்கின்றனர்.

 
 
 
English summary
Netizens point out Seemans speech about SPB
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X