சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்போது எடுத்தது? மெடிக்கல் எமர்ஜென்சிக்கு பார்ம் ஹவுசா?.. ரஜினியின் இ-பாஸ்.. நெட்டிசன்கள் கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் இ பாஸ் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இது தொடர்பாக நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தேனாம்பேட்டையில் இருந்து கேளம்பாக்கம் செல்ல இ பாஸ் எடுத்து இருக்கிறார். தேனாம்பேட்டையில் இருக்கும் ராகவேந்திரா இல்லத்தில் இருந்து கேளம்பாக்கத்தில் இருக்கும் ஆர் கே பார்ம் ஹவுஸ் செல்ல அவர் இ பாஸ் விண்ணப்பித்து உள்ளார்.

இதற்கு மெடிக்கல் எமர்ஜென்சி என்று காரணம் கூறியுள்ளார். தன்னுடன் டிரைவர் ஒருவர் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் . கடந்த வாரம் அவர் காரில் செல்லும் புகைப்படம் வைரலாகி உள்ள நிலையில் தற்போது அவரின் இ பாஸ் வெளியாகி உள்ளது .

மெடிக்கல் எமர்ஜென்சி.. தேனாம்பேட்டை டூ கேளம்பாக்கம்.. பண்ணை வீடு செல்ல இ - பாஸ் எடுத்த ரஜினிகாந்த்!மெடிக்கல் எமர்ஜென்சி.. தேனாம்பேட்டை டூ கேளம்பாக்கம்.. பண்ணை வீடு செல்ல இ - பாஸ் எடுத்த ரஜினிகாந்த்!

கேள்விகள்

கேள்விகள்

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இ பாஸ் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இது தொடர்பாக நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதிகமாக உலா வரும் கேள்வி, ரஜினிகாந்த வெளியிட்டு இருக்கும் இ பாஸ், எந்த நாளுக்காக எடுக்கப்பட்டது, என்பது.

உண்மையில் அது இன்று கேளம்பாக்கம் செல்ல எடுக்கப்பட்ட இ பாஸா என்று கேள்வி எழுந்துள்ளது. அந்த இ பாஸில் 23ம் தேதி என்று உள்ளது. ஆனால் ரஜினி இன்று எங்கும் வெளியே செல்லவில்லை. இன்னொரு பக்கம் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 20 ம் தேதி கேளம்பாக்கம் சென்றதற்காக இ பாஸ் எடுக்கவில்லை என்று புகார் உள்ளது.

தொடர் சர்ச்சை

தொடர் சர்ச்சை

பழைய இ பாஸ் சர்ச்சையை சரி செய்ய ரஜினி இப்போது புதிய இ பாஸ் எடுத்து அதை ரஜினி வெளியே விட்டு இருக்கிறாரா என்று இணையத்தில் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதாவது முன்பே காரில் சென்றுவிட்டு, இப்போது இ பாஸ் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். 20ம் தேதி ரஜினி இ பாஸ் எடுத்தாரா இல்லையா என்பது குறித்து இன்னும் சர்ச்சை நிலவி வருகிறது.

சரமாரி கேள்விகள்

சரமாரி கேள்விகள்

அதேபோல் மெடிக்கல் எமர்ஜென்சிக்கு எதற்கு பண்ணை வீடு செல்ல வேண்டும். அங்கே என்ன மருத்துவ அவசரம் உள்ளது. இதற்கு எப்படி இ பாஸ் அனுமதி அளிக்கப்பட்டது, மெடிக்கல் அவசரம் என்றாலே மருத்துவமனைதானே செல்ல வேண்டும், இதற்கு என்ன ஆதாரம் கொடுக்கப்பட்டது என்றும் பலர் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.

கட்டணமில்லை

கட்டணமில்லை

இன்னொரு பக்கம் ரஜினியின் காருக்கு பழைய செல்லான் காட்டவில்லை என்ற புகாரும் வைக்கப்பட்டுள்ளது . அவர் தனது காருக்கான 100 ரூபாய் செல்லானை செலுத்தவில்லை என்று புகார் உள்ளது. ரஜினி வெளியிட்ட இ பாசில் இருக்கும் QR Codeயை சோதனை செய்தால், அதில் அவரின் அனைத்து விவரமும் அடங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செல்லான் விவரமும் அவரின் இன்னோவா கார் நம்பர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது.

தவறு செய்துவிட்டார்

தவறு செய்துவிட்டார்

அதேபோல் ரஜினிகாந்த் தனது இ பாஸின் QR Codeயை வெளியிட்ட காரணத்தால் அவரின் ஆதார் கார்டு விவரங்கள் வெளியாகி உள்ளது. ரஜினியின் போன் எண்ணும் இதை வெளியாகி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. இணையம் மூலம் அவரின் தனிப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளதை பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.

English summary
Netizens questions on Rajinikanth E Pass for Teynampet to Kelambakkam, Sengalpattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X