சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கெங்கும் கலைஞர்.. கருணாநிதி கொண்டு வந்த மகத்தான திட்டங்கள்.. இணையத்தில் சிலிர்க்கும் நெட்டிசன்கள்

கருணாநிதி கொண்டு வந்த மகத்தான திட்டங்கள்.. இணையத்தில் சிலிர்க்கும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் சாதனைகளை இணையத்தில் நெட்டிசன்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள் .

திமுக முன்னாள் தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி இயற்கை எய்தினார். இன்று அவரின் நினைவுநாள். இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலர் கருணாநிதி குறித்து உருக்கமான டிவிட்களை செய்து வருகிறார்கள்.

கட்சி பேதம் இன்றி தலைவர்கள் பலர் கருணாநிதியின் சாதனைகளை நினைவு கூர்ந்து வருகிறார்கள். இணையத்தில் பலரும் கருணாநிதி குறித்து டிவிட் செய்து வருகிறார்கள்.

அது ஏன் கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டார்.. கடைசி வரை சொல்லவே இல்லையே: Karunanidhi அது ஏன் கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டார்.. கடைசி வரை சொல்லவே இல்லையே: Karunanidhi

 ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்

கருணாநிதியின் சாதனைகளை விளக்கும் வகையில் தற்போது #எங்கெங்கும்கலைஞர் என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்து அவர் கொண்டு வந்த திட்டங்கள், அவர் செய்த சாதனைகள், எதிர்க்கட்சியில் இருந்து அவர் எதிர்த்த திட்டங்கள், இன்னும் எத்தனை வருடங்களுக்கு அவரின் திட்டங்கள் நம்மை வழி நடத்தும் என்று #எங்கெங்கும்கலைஞர் டேக்கில் பலரும் டிவிட் செய்து வருகிறார்கள்.

 என்ன சாதனை

என்ன சாதனை

தமிழகத்தில் தொழிற்புரட்சி மற்றும் ஐடி புரட்சியை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி. முதல் ஐடி ஹப் முதல் சிப் காட் வரை எல்லாம் கருணாநிதி கொண்டு வந்தது. வெளிநாட்டு முதலீடுகளை எப்படி ஈர்ப்பது என்று இந்தியாவிற்கே பாடம் எடுத்தவர் கருணாநிதி.

இந்தியாவிற்கே வழிகாட்டி

இந்தியாவிற்கே வழிகாட்டி

பேருந்துகளை அரசுடைமையாக்கி இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்ந்தவர் கருணாநிதி. அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து என்ற நோக்கத்தின் முதல் படி இங்குதான் எடுத்து வைக்கப்பட்டது.ஆசியாவின் பெரிய நூலகமான அண்ணா நூலகத்தை உருவாக்கியது தொடங்கி பல்வேறு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளை உருவாக்கிய சிறப்பு பெற்றவர் கருணாநிதி.

முதல் மாநிலம்

முதல் மாநிலம்

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். அதேபோல் அரசு துறைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டது .ஆசியாவின் முதல் வெட்னரி மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகம் கருணாநிதி மூலம் உருவாக்கப்பட்டது. உயர் படிப்புகளில் 59% இடஒதுக்கீடு தொடங்கி, இடைநிலை, மிகவும் பிறப்படுத்தப்பட்ட சாதிகளில் உள் ஒதுக்கீடு, ஆதிதிராவிடர்களுக்கான நல விடுதிகளை உருவாக்கியது என்று பல சாதனைகளை செய்துள்ளார்.

இந்திய குடிசைகள்

இந்திய குடிசைகள்

இந்தியாவிலேயே முதல் முறையாக குடிசைகள் மாற்று வாரியத்தை முதல்வர் கருணாநிதிதான் உருவாக்கினார். அதேபோல் சாதிகளை களையும் வகையில் சமத்துவபுரங்களை உருவாக்கினார். ரிக்ஷாவை தடை செய்தார். நவீன தமிழகத்தின் முன்னோடியாக கருணாநிதி திகழ்கிறார், திகழ்வார் என்று இணையம் முழுக்க நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள்

தலைவர்கள்

பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கருணாநிதியை நினைவு கூர்ந்து வருகிறார்கள். அவரின் சாதனையை பட்டியலிட்டு வருகிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தொடங்கி பல்வேறு மாநில முதல்வர்கள் கருணாநிதியின் நினைவு நாள் குறித்து டிவிட் செய்துள்ளனர். திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் எல்லோரும் கருணாநிதியின் நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

English summary
Netizens remember Late CM Karunanidhi's schemes on his anniversary that shaped Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X