சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் முதல்முறையாக இப்படி ஒரு போர்டை பார்க்கிறோம்.. நிலைமை மோசமாகிறது.. பதறும் நெட்டிசன்ஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிகரிக்கும் தண்ணீர் தட்டுபாடு... வீட்டில் இருந்தே வேலை செய்ய ஐடி நிறுவனங்கள் கட்டளை

    சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டாகியுள்ளது.

    சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் குடிநீருக்கே குடங்களுடன் அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    சென்னையில் பல இடங்களில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை நகரின் பல இடங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சமைக்க தண்ணீர் இல்லாததால் மூடப்படுவதாக அறிவிப்பு பலகைகைளை வைத்துள்ளனர். இதனை கண்டு நெட்டிசன்கள் வருத்தமடைந்துள்ளனர்.

    முதல் முறையாக பார்க்கிறோம்

    சென்னையில் முதல் முறையாக ஹோட்டல்களுக்கு முன்பு இப்படி ஒரு போர்டை பார்க்கிறோம்.. சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது..

    வெறுமையின் நிறங்கள்

    வெறுமையின் நிறங்கள்..

    நாம் இழக்க நேரிடும்

    சென்னையின் தண்ணீர் பற்றாக்குறையை மத்திய அரசு கண்காணிக்கிறதா என தெரியவில்லை.அடிப்படை உள்கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக நாம் நிறைய தொழிற்சாலைகள் மற்றும் ஐடி நிறுவனங்களை இழக்க நேரிடும்.

    தடை செய்ய வேண்டும்

    இன்னும் மணல் மாஃபியா தமிழகத்தில் பெரிய அளவில்தான் உள்ளது. அவர்கள் அருகில் உள்ள மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறார்கள். தமிழக அரசு ஆறுகளில் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும். இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை.

    வானின்று உலகம்

    திருக்குறள்
    வானின்று உலகம் வழங்கி வருதலால்
    தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
    மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

    எங்கிருந்து தண்ணீர் செல்கிறது?

    தண்ணீர் பிரச்சனையால் குளிர்பானங்கள் உற்பத்தியும் அரசின் சாராய உற்பத்தியும் குறையுமா? இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து தண்ணீர் செல்கிறது!

    தண்ணீர் தட்டுப்பாடு

    90களில் பிறந்த குழந்தைகளுக்கு பொண்ணு தட்டுப்பாடு,
    தமிழ்நாட்ல தண்ணிக்கு தட்டுப்பாடு..

    English summary
    Netizens Sharing their feelings on Water scarcity in Tamilnadu and Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X