சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கையை கட்டிப்போட்டு விட்டு இலையே இல்லாமல் மலர்ந்தது தாமரை! தேர்தல் முடிவு குறித்து நெட்டிசன்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது குறித்தும் தமிழகத்தில் படுதோல்வியடைந்தது குறித்தும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த வியாழக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நாடு முழுவதும் 303 இடங்களை தனித்தே கைப்பற்றியது பாஜக.

பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியமைக்கவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தோல்வி குறித்தும் தமிழகத்தில் பாஜகவின் நிலை குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில,

சுமலதாவிடம் பெற்ற தோல்வியை தாங்க முடியாத குமாரசாமி மகன்.. நள்ளிரவில் மைசூர் ஹோட்டலில் கலாட்டா

நீருக்குள் மூழ்கிய தாமரை

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிய தாமரை.
#TNrejectsBJP

தாமரை தானாக மலரும்

இந்த ஆட்சியில் என் முதல் வேலை,கோதாவரி இணைப்பு மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தருவதே-நிதின் கட்கரி.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றுங்கள் தாமரை மலரும்.

சாக்கடையில் மலராது

குளத்தில் தாமரை மலரும்...
சேற்றில் கூட தாமரை மலரும்...
ஆனால் ஒரு போதும் சாக்கடையில் தாமரை மலராது...
அந்த சாக்கடையை சுத்தப்படுத்தி தாமரையை மலர வைத்தே தீருவோம்.. அது வரை ஓய்ந்திட மாட்டோம்...

இலையே இல்லாமல்

கையை கட்டிப்போட்டு விட்டு இலையே இல்லாமல் மலர்ந்தது தாமரை

தாமரை மலரும்

தனிமனித ஒழுக்கம்
அரசியல் தூய்மை
தமிழக மக்கள் தேடும்போது
தாமரை மலரும்

மண் கெட்டுபோய்விட்டது

நாடு முழுதும் மலர்ந்த தாமரை தமிழகத்தில் மலரவில்லை என்றால் மலர் மேல் குற்றமில்லை,மண் கெட்டு போய். . பல காலமாகி்விட்டது...

தமிழ் மண்ணில் மலராது

சேற்றில் தான் தாமரை மலரும்,
நல்ல மண்ணில்..அதுவும் எங்கள் தமிழ் மண்ணில் தாமரை மலராது ஆங்.

கருகியே போச்சாம்

கடைசில அந்த தாமரை கருகியே போச்சாம் தமிழ் நாட்டுல

அந்த பக்கம் மலரும்

தாமரை குஜராத் ராஜஸ்தான் பக்கம் மலரும்

English summary
Netizens sharing their views on BJP Victory and BJP defeat in Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X