சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எக்ஸ்ட்ரா பாணிபூரி கேட்க இந்தி மொழி தேவையா..? கூகுள் சிஇஓவே இந்தி பேசமாட்டார்.. நெட்டிசன்ஸ் அதகளம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தி கட்டாய பாடம்-கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள் வெளியீடு- வீடியோ

    சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் மும்மொழி கொள்கையை கொண்டுவர கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ளது. கஸ்தூரி ரங்கன் பரிந்துரையை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    இந்தி திணிப்புக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் இந்தி மொழிக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகியுள்ளன. இந்தி திணிப்பு குறித்து நெட்டிசன்கள் தெரிவித்துள்ள கருத்துக்களில் சில

    மாலை நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம்... வானிலை ஆய்வு மையம் தகவல் மாலை நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம்... வானிலை ஆய்வு மையம் தகவல்

    என்னுடைய ரியாக்ஷன்

    யாராவது நமது தேசிய மொழி இந்தி என கூறினால் என்னுடைய ரியாக்ஷன் இதுதான் என்கிறார் இந்த நெட்டிசன்

    எக்ஸ்ட்ரா பாணிபூரி கேட்க?

    எக்ஸ்ட்ரா பாணிபூரி கேட்க இந்தி மொழி தேவையா? என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்

    கூகுள் சிஇஓ கூட..

    சில மாணவர்கள் இந்தி கற்று நேரத்தை வீணடிக்கிறார்கள்.. அந்த நேரத்தை கணக்கு மற்றும் இன்ஜீனியரிங்கில் செலவழிக்கலாம்.. கூகுள் சிஇஓ கூட இந்தி பேசமாட்டார்.. என்கிறார் இந்த நெட்டிசன்..

    தேசிய விலங்காக்க முடியாது

    புலிகளை விட நாய்கள் அதிகமாக உள்ளது என்பதற்காக நாய்களை தேசிய விலங்காக்க முடியாது.. அதுதான் இங்கேயும் பொருந்தும்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    ஆங்கிலம் - நம் கல்வி மொழி

    தமிழ் நம் தாய் மொழி... ஆங்கிலம் நம் கல்வி மொழி... என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்

    வரலாறை திருப்பாதீர்கள்

    இந்தியை எளிதில் திணிக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு எங்களின் வரலாறு தெரியாது, வரலாற்றை மீண்டும் திருப்பாதீர்கள்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்

    கலக்கல் போட்டோ

    நாங்கள் இப்போது இந்தியை கற்றால்.. அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் மாநிலம் இப்படிதான் இருக்கும் என்று வடமாநிலத்தவர்கள் பான்பிராக், பீடா போட்டு கண்ட இடங்களில் துப்பும் போட்டோவை பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்..

    English summary
    Netizens Sharing their views on Hindi impose. #TNAgainstHindiImposition #StopHindiImposition are trending on Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X