சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்! நெட்டிசன்ஸ் அஞ்சலி!

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது, திடீரென ஏற்பட்ட வன்முறையை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்ததன் ஓராண்டு நினைவு தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இந்த படுகொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் அஞ்சலி செலுத்தியும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஜாலியன் வாலாபாக்

தூத்துக்குடி... தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்

வீரவணக்கம்

துணிவுடன் போராடி..
துரோகங்களாலும் தோட்டாக்களாலும் வீழ்த்தப்பட்ட...
தூத்துக்குடி போராளிகளுக்கு..
வீரவணக்கம்

அமைதியாக இருக்கும்

இன்று தூத்துக்குடி பார்த்து அமைதியாக இருக்கும் நாம்.....
நாளை இதே நிலைமை நமக்கு வரும் காலம். வெகு
தொலைவில் இல்லை

அதிகாரம் பெற்ற நாள்

வரலாற்றில் இன்று!!!! தூத்துக்குடி படுகொலைகள்..
மே 22, 2018
வாட்டாச்சியர்கள் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடும் அளவிற்கு அதிகாரம் பெற்ற நாள் இன்று...

தாய்த்தமிழ் உறவுகள்

தூத்துக்குடியின் நச்சுக் காற்றை தங்களின் இறுதி மூச்சுக் காற்றால் சுத்திகரித்து; தூய காற்றில் நிறைந்திருக்கும் எமது தாய்த்தமிழ் உறவுகள்...

அடுத்து எங்கே?

ஈழத்தில் தமிழர்களைச் சுட்டுக் கொன்றார்கள்.
ஆந்திரக் காட்டுக்குள் சுட்டுக் கொன்றார்கள்.
இந்தியக் கடலெல்லையில் சுட்டுக்கொன்றார்கள்.
பரமக்குடியில் சுட்டுக்கொன்றார்கள்.
தூத்துக்குடியில் சுட்டுக்கொன்றார்கள்.
அடுத்து?

மறைக்கவும் முடியாது

#தூத்துக்குடி_துப்பாக்கிச்சூடு மறக்கவும் மறைக்கவும் முடியாது... போராளிகளுக்கு என் அஞ்சலி

English summary
Netizens sharing their views on Tuticorin massacre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X