சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கனிமொழியை கலாய்க்க நினைத்து, சிக்கிய எச்.ராஜா!

Google Oneindia Tamil News

சென்னை: கனிமொழிக்கு பதிலடி அளிப்பதாக நினைத்து, ஹிந்தி திணிப்பு பற்றி, ஒரு ட்வீட் போட்டுவிட்டு, பாஜகவின் எச்.ராஜா நெட்டிசன்களிடம் சிக்கி திணறி வருகிறார்.

மாட்டுக் கறி சாப்பிடுவோர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக, திமுக எம்பி கனிமொழி நேற்று ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தார். அதில், எதை உண்பது என்பதை தீர்மானிப்பது உண்பவர் மட்டுமே. மற்றவர்கள் அல்ல என்று தெரிவித்திருந்தார்.

திணிப்புக்கும், தானாக முடிவெவடுப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைதான் கனிமொழியும் சொல்கிறார் என்று நெட்டிசன்கள், ராஜாவை வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை உங்க குடும்பம் முடிவு செய்யக் கூடாது: கனிமொழிக்கு எச்.ராஜா பதிலடிஎந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை உங்க குடும்பம் முடிவு செய்யக் கூடாது: கனிமொழிக்கு எச்.ராஜா பதிலடி

விருப்பம்

உண்மைதான் ராசா. எந்த மொழியை படிக்கவேண்டும் என்பது அவரவர் விருப்பம்! திணிக்க கூடாது! என்கிறார் இந்த நெட்டிசன்.

ஹமாரா ஹே

அதான் சார் நாங்களும் சொல்றோம்..., தமிழர்கள் நாங்கள் எந்த மொழி படிக்கவேண்டும் என்று நாங்க முடிவு பண்ணிக்கிறோம்... நீங்க உங்க ஹிந்திய எங்க மேல திணிக்கர வேலய வச்சிக்காதிங்க... ஹமாரா ஹே,, ஹிந்தி ஹே,, இதர் நஹி ஹே...

நீங்களே தமிழை கற்க வேண்டும்

தமிழகத்தில் படிப்பவர்கள், இந்தி வேண்டாம் என்று கூறும்போது நீங்க ஏன் திணிக்க முயலுகிறீர்கள்? வடநாட்டில் இருந்து பிழைக்க வந்த ‘வந்தேறிகள்' தமிழைக் கற்றுக்கொண்டு இங்கே பிழைக்க வேண்டுமே தவிர உங்கள் மொழியை இங்கே திணிக்க முயலுவது மகா அயோக்கியத்தனம்!

ஹிந்தி டியூசன்

அதத்தான், அவங்களும் சொல்றாங்க. நாங்க ஹிந்தி படிச்சே தீரணும்னு மத்திய அரசு சொல்ல கூடாது. பெத்தவங்க தன்னோட குழந்தை ஹிந்தி கத்துக்கணும்னு விருப்பப்பட்டா அவங்கள எத்தனையோ ஹிந்தி tution இருக்கு அங்க சேத்து கத்துக்க வைக்கலாம்.

English summary
The DMK MP Kanimozhi's tweet yesterday about the attacks on Beef-eaters. In it, only the eater decides what to eat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X