சகுனம் சரியில்லன்னாங்களே.. இப்போ பாருங்க! 60 வருடத்தில் இப்படி ஆனதே இல்லை.. ஆடிப்போன அறிவாலயம்!
சென்னை: மேட்டூர் அணையை மே மாதமே திறக்க இருப்பதால் ஆளும் தரப்பினர் ஏக குஷியில் இருக்கிறார்களாம். இது மிகப்பெரிய நல்ல சகுனம் என்று ஆளும் தரப்பில் இருக்கும் ஆன்மீக ஈடுபாடு கொண்ட சிலர் நினைக்கிறார்களாம்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்த சம்பவங்கள் ஆளும் கட்சிக்கு எதிராக திரும்பியதாக கூறப்பட்டன. அதிலும் கடவுள், சம்பிரதாயம், சடங்குகள் தொடர்பாக நடைபெற்ற சம்பவங்களால் ஆளும் தரப்பில் இருக்கும் சிலர் கொஞ்சம் மன கஷ்டத்தில் இருந்ததாகவும் செய்திகள் வந்தன.
சமீபத்தில் தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடந்த தேர் பவனி உலாவில் மின்சார கம்பியில் தேர் உரசியதில் ஏற்பட்ட மின் விபத்தினால் 12 பேர் இறந்து போனார்கள். இப்படி தேர் விபத்து ஏற்படுவது என்பது அபசகுனம் என்று கூறப்பட்டது.
உங்கள் கனவு ஒரு போதும் பலிக்காது! மத்திய அரசுக்கு சவால் விடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

ஆபத்து
இதனால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து வரலாம் என்றும் கூட பலர் குறிப்பிட்டனர். இப்படி நடப்பது நல்ல சகுனம் கிடையாது. அரசுக்கு எதிரான சகுனம் இது என்று கூறப்பட்டது. அன்றைய தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஒரே நாளில் இரண்டு தீ விபத்து நடப்பது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கூட சில ஜோசியர்கள் சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

சகுனம்
அதன்பின் சென்னை அயோத்தியா மண்டப விவகாரத்தில் அந்த நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முயற்சித்தது தொடர்பான வழக்கில் இந்து அறநிலைதுறைக்கு எதிராக தீர்ப்பு வந்தது. இதுவும் கடவுள், சம்பிரதாயம் தொடர்பான விஷயம் என்பதால் அரசுக்கு சகுனம் சரியில்லை என்று கூறப்பட்டது. மொத்தத்தில் அரசுக்கு எதிராக சகுனங்கள் இருப்பதாகவே பலர் பேசினர்.

கண்டுகொள்ளவில்லை
ஆனால் ஆளும் தரப்பினர் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதை எல்லாம் பார்த்தால் ஆகாது.. அவர்கள் கூடத்தான் முதல்வராக ஸ்டாலின் வர மாட்டார் என்றார்கள். ஆனால் அவர் முதல்வர் ஆகவில்லையா? என்று வாதம் வைத்தனர். ஆனாலும் சில அமைச்சர்களின் மனைவிகள், குடும்பத்தினர் இந்த சகுனங்களை பார்த்து சிறப்பு பரிகாரங்களை செய்ததாக கூறப்பட்டது.

பரிகாரம்
அதிலும் ஆளும் தரப்பில் ஆன்மீக ஈடுபாடு கொண்ட சில முக்கிய தலைகள் இதற்காக பரிகாரம் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு நெருக்கமான ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்பட்டது. மக்கள் அதிகம் இருக்கக் கூடிய கோவில் திருவிழாவில் மின் விபத்து ; மரணம். மின் விபத்து என்பதை தீ என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இப்படி ஆலோசனைகள் வழங்கப்பட்டதாம். ஆனால் இப்போது மேட்டூர் அணை திறப்பு ஆளும் தரப்பை குஷி படுத்தி உள்ளதாம்.. அதாவது கெட்ட சகுனங்களுக்கு இடையே மேட்டூர் அணையை மே மாதமே திறக்க இருப்பதால் ஆளும் தரப்பினர் அதை நல்ல சகுனமாக பார்க்கிறார்கள்..

சந்தோஷம்
இது மிகப்பெரிய நல்ல சகுனம் என்று ஆளும் தரப்பில் இருக்கும் ஆன்மீக ஈடுபாடு கொண்ட சிலர் நினைக்கிறார்களாம். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து மே 24ஆம் தேதி அன்று நீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு முன் இப்படி மே 24ம் தேதியே ஒருமுறை கூட மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது இல்லை. அதாவது கடந்த 60 வருடங்களில் ஒருமுறை கூட மேட்டூர் அணை இவ்வளவு சீக்கிரம் திறக்கப்பட்டது இல்லை.

மேட்டூர்
இதனால் அறிவாலய தரப்பை சேர்ந்த சில ஆன்மீக நம்பிக்கையாளர்கள் இதைவிட என்ன நல்ல சகுனம் வேண்டும் என்று நம்பிக்கையில் இருக்கிறார்களாம். நீர் பஞ்சம் இதெல்லாம் ஏற்பட்டால்தான் அது கெட்ட சகுனம். ஆனால் இப்படி முன்கூட்டியே தண்ணீர் வருவது, கோடையிலும் மழை பெய்வது எல்லாம் அரசுக்கு நலன் சகுனம் என்று அமைச்சர்கள் சிலரின் குடும்பத்தினர் குஷியில் இருக்கிறார்களாம்.. பழைய சகுனத்தை எல்லாம் போட்டு குழப்ப வேண்டாம் என்று அமைச்சர்களுக்கு அட்வைஸ் சொல்லி இருக்கிறார்களாம்.