சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

48 மணி நேரத்தில் பொங்க போகிறது கடல்..28ம் தேதி முதல் மழை பெய்யும்- வானிலை மையம்

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu weather: 29-ம் தேதி உருவாகிறது புயல்.. கடலோர மாவட்டங்களில் கன மழை உறுதி- வீடியோ

    சென்னை: இந்திய பெருங்கடல் - தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சில தினங்களாகவே தமிழகத்தின் நிறைய இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று அதிகமாகவே பெய்து வருகிறது.

    ஆனால் சென்னையில் மழையே இல்லை.. ஏதோ தூறல், சாரல் என்று பொழிந்து வருகிறதே தவிர பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மழை இல்லை. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சென்னைவாசிகளுக்கு ஒரு நிம்மதியை தந்துவருகிறது.

     30-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. குளுகுளு கூலாகிறது சென்னை!- நார்வே வானிலை மையம் 30-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. குளுகுளு கூலாகிறது சென்னை!- நார்வே வானிலை மையம்

    குறைந்த தாழ்வுநிலை

    குறைந்த தாழ்வுநிலை

    இந்நிலையில்தான் புயல் வரப்போவதாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாழ்வு மண்டலம்

    தாழ்வு மண்டலம்

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாம்.

    பலத்த காற்று

    பலத்த காற்று

    அதாவது நாளை முதல் தென்மேற்கு வங்ககடல் பகுதி, இந்திய பெருங்கடல், இலங்கை கடல்பகுதி இந்த கடற்பகுதிகளில் காற்று பலமாக வீசப்போகிறது. 30-40 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும் என்று கூறுகிறார்கள். ஆனால் நாளை மறுநாள் 26-ம் தேதி மற்றும் 27-ஆம் தேதி இதே காற்று, 40-50 கிலோ மீட்டருக்கு வீசப்போகிறதாம்.

    மழை பெய்யும்

    மழை பெய்யும்

    காற்று இப்படி வீசபோகிறது என்றால், தென்தமிழகம், கடலோர மாவட்டங்களில் மழை கொட்ட போகிறதாம். அதுவும் 29ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கட்டாயம் பெய்யும் என்று வானிலை மையம் கூறுகிறது!

    ஆயத்த பணிகள்

    ஆயத்த பணிகள்

    எனவே, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என்ற எச்சரிக்கை வந்துள்ளதால், அதற்கான ஆயத்த பணிகளிலும், முன்னேற்பாட்டு நடவடிக்கைகளிலும் மாவட்ட நிர்வாகங்கள், மீனவர்கள், பொதுமக்கள் ரொம்பவே மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    English summary
    New Cyclone chance for Bay of bengal due to Deep depression in next 48 hours
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X