சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னொரு புயல் வர போகுதா.. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புரட்டி எடுக்க போகும் மழை

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வரும் 8-ம் தேதிக்கு இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது... அதனால் தென்கிழக்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Recommended Video

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புரட்டி எடுக்க போகும் மழை

    சமீப நாட்களில் மட்டும் 2 புயல்கள் இந்தியாவுக்குள் வந்துள்ளது.. ஆனாலும் தமிழகத்தில் மழை என்பதே இல்லை.. ஆம்பன் புயல் வந்தபோது, நமக்கு வெயில்தான் அடித்தது. பிறகு அடுத்த புயல் நிகார்சா அரபிக்கடலில் வர உள்ளது.. இது காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாற போவதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தும் இருந்தது.. இந்த புயலாலும் நமக்கு மழை இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

     new cyclone forming in bay of bengal, says chennai meteorological department

    இப்போது வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வரும் 8-ம் தேதிக்கு இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது... அதனால் தென்கிழக்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இந்த தாழ்வு பகுதியினால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது... மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    ஸ்பெஷலிஸ்ட் வந்துவிட்டார்.. சீன எல்லைக்கு Fire & Fury படையை அனுப்பும் இந்தியா.. நாளை என்ன நடக்கும்?ஸ்பெஷலிஸ்ட் வந்துவிட்டார்.. சீன எல்லைக்கு Fire & Fury படையை அனுப்பும் இந்தியா.. நாளை என்ன நடக்கும்?

    சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. 8,9 தேதிகளில் மழை இருக்கும் என்றாலும் இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, தோவாளை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    English summary
    new cyclone forming in bay of bengal, says chennai meteorological department
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X