சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ட்யூசன் எடுத்தா நல்லாசிரியர் விருது நோ! பள்ளிக்கல்வித்துறையின் ’வாத்தி’ ரெய்டு! ஷாக்கான ஆசிரியர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசியர் விருதுக்கு ட்யூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக் கூடாது எனவும், அரசியல் தொடர்புள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவினை வெளியிட்டுள்ளது.

ஆசிரியராகப் பணியாற்றி, குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ஆண்டு தோறும் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவது வழக்கம்.

மின்சார சட்ட திருத்த மசோதாவால் தமிழக இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார சட்ட திருத்த மசோதாவால் தமிழக இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி

 நல்லாசிரியர் விருது

நல்லாசிரியர் விருது

மத்திய அரசின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், தமிழக அரசின் சார்பில் மாநில நல்லாசிரியர் விருதும் ஆண்டு தோறும் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எத்தனை விருதுகள் வழங்கப்பட உள்ளன என அரசிடமிருந்து முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்படும். அதன்படி, முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி, ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெறுவார்.

புகார்கள்

புகார்கள்

அதன்பின்னர், 6 பேர் கொண்ட குழு அமைத்து விண்ணப்பித்த ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்தி, மாவட்டத்துக்கு வழங்கப்பட உள்ள விருதுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விண்ணப்பங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றிலிருந்து விருதுக்குரிய ஆசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கப்படும். இந்நிலையில் அரசியல் சார்புள்ளவர்களுக்கும், நேரடியாக அரசியல் கட்சியில் தொடர்பில் இருப்பவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

நடைமுறையில் மாற்றம்

நடைமுறையில் மாற்றம்

இதனையடுத்து இந்த விருது வழங்கும் நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பாடும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசியர் விருதுக்கு ட்யூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக் கூடாது என அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பாக 38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்களை விருதுக்கு தேர்வு செய்ய புதிய நடைமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.

ட்யூசன் எடுத்தால் விருதில்லை

ட்யூசன் எடுத்தால் விருதில்லை

அதன்படி," டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ட்யூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக் கூடாது. அரசியல் தொடர்புள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கக் கூடாது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் சிஇஓ தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். 5 ஆண்டுகள் எந்த புகாருக்கும் இடம் தராமல் ஆசிரியர்கள் பணியாற்றிருக்க வேண்டும்."உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Department of School Education has issued an action order not to nominate the names of Tucson teachers for the Dr. Radhakrishnan Nallasiyar Award given by the Tamil Nadu Government and also not to nominate the names of politically connected teachers for the State nallasiriyar award
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X