சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடிமகன்களுக்கு கெட்ட செய்தி.. இன்று முதல் புது ரேட்.. டாஸ்மாக் கடைகளில் விலை உயர்வு அமலுக்கு வந்தது

தமிழக டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 07-02-2020 | Oneindia tamil Morning news

    சென்னை: தமிழக டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய விலை இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது.

    தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே டாஸ்மாக் என்ற பெயரில் ஏற்று நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. தமிழக அரசின் வருமானத்தில் டாஸ்மாக் முக்கியமான பங்கு வகிக்கிறது.

    New pricing and rate in Tasmac comes to active today

    இவற்றின் மூலம் அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடிக்கும் மேல் வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. அரசின் திட்டங்கள் பலவற்றிற்கு இதன் மூலம் பணம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

    எல்லா வருடமும் பண்டிகை நாட்களில் டாஸ்மாக்கில் அதிக அளவில் டார்கெட் விதிக்கப்படும்.பல நூறு கோடிகளில் விற்பனை நடக்கும். கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது.

    அதன்பின் இங்கு மதுபானங்களின் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் புதிய பட்ஜெட் மற்றும் வருவாய் இழப்பு காரணமாக தற்போது மீண்டும் மது பானங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அதன்படி 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட குவார்ட்டர் அளவு மது பாட்டில்களுக்கு 10 ரூபாயும், பீர் பாட்டில்களுக்கு 10 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் பாட்டிலும் தற்போது விற்கும் விலையுடன் கூடுதலாக ரூ.10 கொடுத்து வாங்க வேண்டும். ஃபுல் விலை ரூ.40 அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை முதல் இந்த விலை அமலுக்கு வந்துள்ளது. மதுபிரியர்களை இந்த செய்தி பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    English summary
    New pricing and rate in Tasmac come to active from today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X