சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொறுமை காத்த பீட்டர் அல்போன்ஸ்.. பதவியை தட்டி சென்ற கே.எஸ் அழகிரி.. என்னதான் நடக்கிறது காங்கிரஸில்?

தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு பீட்டர் அல்போன்சிற்கு பதிலாக கே.எஸ் அழகிரி நியமிக்கப்பட்டு இருப்பது சில காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பொறுமை காத்த பீட்டர் அல்போன்ஸ்.. பதவியை தட்டி சென்ற கே.எஸ் அழகிரி

    சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு பீட்டர் அல்போன்சிற்கு பதிலாக கே.எஸ் அழகிரி நியமிக்கப்பட்டு இருப்பது சில காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    நேற்று இரவு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக பலரால் எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் என்று கூட அதை கூறலாம்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய செயல் தலைவர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    பீட்டர் அல்போன்ஸ் பேச்சு

    பீட்டர் அல்போன்ஸ் பேச்சு

    தமிழக காங்கிரஸ் பதவிக்கு திருநாவுக்கரசருக்கு பதிலாக பீட்டர் அல்போன்ஸ் தலைவர் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரே சிலர் கடந்த சில நாட்களாக பேசி வந்தனர். வெளிப்படையாக பீட்டர் அல்போன்ஸ்தான் தலைவராக போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது.

    அவர்தான்

    அவர்தான்

    காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்தும் திருநாவுக்கரசருக்கு பதிலாக பீட்டர் அல்போன்ஸ்தான் பேட்டி அளித்து வந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசரை விட பீட்டர் அல்போன்ஸ் அதிகம் முன்னிறுத்தப்பட்டார். அதேபோல் ராகுல் காந்தி தமிழகம் வந்த போது கூட பீட்டர் அல்போன்சிடம் தனியாக நீண்ட நேரம் உரையாடினார்.

    ஆனால் என்ன நடந்தது

    ஆனால் என்ன நடந்தது

    ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய செயல் தலைவர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    ப. சிதம்பரம்

    ப. சிதம்பரம்

    இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. காங்கிரஸ் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அதேபோல் தற்போது செயல் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பவர்களும் சிலர் ப.சிதம்பரத்திற்கு நெருக்கமானவர்கள். இதனால் இந்த தலைவர் தேர்விற்கு பின் ப.சிதம்பரத்தின் ஆலோசனை இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    வாய்ப்பு இருக்கிறது

    வாய்ப்பு இருக்கிறது

    அதேபோல் ப. சிதம்பரம் மட்டுமில்லாமல், குஷ்பு, ஜோதிமணி ஆகியோரின் ஆதரவும் இவருக்கு இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதனால்தான் பீட்டர் அல்போன்சிற்கு பதிலாக இவரை ராகுல் தேர்வு செய்தார் என்று கூறுகிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

    ஒரு பக்கம்

    ஒரு பக்கம்

    ஆனால் இன்னும் பீட்டர் அல்போன்ஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில்தான் இருக்கிறார்கள். பீட்டர் அல்போன்ஸ்தான் தலைவராக வருவார் என்று நம்பிக்கையில் இருந்த அவரது ஆதரவாளர்களுக்கு இந்த தேர்வு பெரிய ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது. பீட்டர் அல்போன்ஸ் இதற்கு எப்படி பதில் அளிக்கிறார் என்பதை பொறுத்தே கட்சிக்குள் அடுத்த கட்ட நகர்வுகள் நடக்கும் என்கிறார்கள்.

    English summary
    New Tamilnadu Congress Committee Chief: The reason behind, Why Rahul didn't go for Peter Alphonse.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X