சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரும் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம்

Google Oneindia Tamil News

சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக கட்டண நிர்ணய குழு அறிவித்திருந்தது. இதற்கு கல்லூரிகள் விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கும் 500-க் கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் படிக்க சேர்கிறார்கள். இந்த பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

அவ்வாறு தனியார் கல்லூரியில் சேரும் கல்லூரி மாணவர்களுக்கு, கல்விக் கட்டணமாக 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை கல்லூரிக்கு ஏற்ப அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேலும், கல்லூரி அமைத்துள்ள போக்கு வரத்து, விடுதி, உணவு போன்ற வைகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்வது கிடையாது.

திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்... ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கை நிறுத்தம் -மு.க.ஸ்டாலின்திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்... ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கை நிறுத்தம் -மு.க.ஸ்டாலின்

கூடுதல் கட்டணம்

கூடுதல் கட்டணம்

இதனிடையே, கூடுதலாக கல்விக் கட்டணம் வசூல் செய்யும் கல்லூரிகள் மீது புகார் அளிக்க, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் (தேர்வு) தலைமையில் விசாரணை கமிட்டி உள்ளது. இந்த விசாரணை கமிட்டி தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீதான புகார்களை விசாரித்து வருகிறது.

புதிய கட்டணம்

புதிய கட்டணம்

இந்நிலையில் கொரோனா வைரஸ் லாக்டவுன் பிரச்னைக்கு பின்னர் நிறைய மாறுதல்களை தமிழகம் சந்தித்து வருகிறது. அந்த வகையில் வரும்ஆண்டில் பொறியியல் படிப்பில் சேரப்போகும் கல்லூரி மாணவர்கள் புதிய கல்வி கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

ஜுன் 1வரை அவகாசம்

ஜுன் 1வரை அவகாசம்

ஏனெனில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக கட்டண நிர்ணய குழு அறிவித்திருந்தது. இதற்கு கல்லூரிகள் விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் கட்டண நிர்ணய குழு அவகாசத்தை ஜூன் 15 வரை நீட்டித்துள்ளது.

இந்தாண்டு கட்டணம்

இந்தாண்டு கட்டணம்

2020- 21 முதல் 2022- 23 ஆம் ஆண்டு வரையிலான மூன்று கல்வி ஆண்டுகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்க குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாகங்கள் தங்களுக்கு ஆகும் செலவினங்கள் மற்றும் எதிர்பார்க்கும் கல்வி கட்டண உயர்வு உள்ளிட்ட விவரங்களை வரும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் கட்டண நிர்ணயக் குழுவின் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகங்களின் மனுக்களை ஆய்வு செய்தபிறகு நடப்பு கல்வியாண்டு துவங்குவதற்கு முன்பாக புதிய கல்வி கட்டணம் வெளியிடப்படும். புதிய கட்டணம் கல்லூரிகளை நடத்துவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்று கல்லூரிகள் விரும்புகின்றன. அதேநேரம் மாணவர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே உள்ளது.

English summary
New tuition fee for private engineering colleges , Time extend for colleges to apply, last date june 15th
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X