சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி

அரசு பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புது சீருடை அறிமுகம்

    சென்னை: அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதலே இந்த சீருடை அறிமுகமாகிறது.

    சமீப காலமாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே நவீன சீர்திருத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    New uniform for TN government school students from 9th to 10th

    அதன்படி கணினி வகுப்புகள், ஸ்மார்ட் வகுப்புகள், கியூ-ஆர் குறியீடு புத்தகங்கள் என்று பல புதுமையான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. யூனிபார்மிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் செய்யப்படும் என்று செங்கோட்டையன் சென்ற வருடமே அறிவித்திருந்தார்.

    அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதற்கட்டமாக 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் தனித்தனி யூனிபார்ம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு தனி யூனிபார்மும், 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு தனி யூனிபார்மும் இந்த கல்வி ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பச்சை நிறத்தில் கட்டம் போட்ட அரைக்கை சட்டையும், பச்சை நிற அரைக்கால் டவுசரும், மாணவிகளுக்கு அரைக்கை சட்டையும், ஸ்கர்ட்-ம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டம் போட்ட பழுப்பு நிற சட்டை, பழுப்பு நிற பேன்ட்டும், மாணவிகளுக்கும் அதே நிறத்தில் ஓவர் கோட்டுடன், சுடிதார் டைப்பில் யூனிபார்ம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கும் தலா 4 சீருடைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Minister Sengottaiyan has announced, new uniforms for TN government school students
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X