சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டார்க்கெட்டை உயர்த்திய டாஸ்மாக்.. முச்சதம் அடிக்க திட்டம்.. மதுக்கடைகளில் அலைமோதும் குடிமகன்ஸ்!

டிசம்பர் 31-ந்தேதி மற்றும் ஜனவரி 1-ந்தேதி ஆகிய 2 நாட்களில் இந்த வருடம் 300 கோடி ரூபாய் வரை வருமானம் வரும் என்று டாஸ்மாக் எதிர்பார்க்கிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    புத்தாண்டுக்காக டார்க்கெட்டை உயர்த்திய டாஸ்மாக்

    சென்னை: டிசம்பர் 31-ந்தேதி மற்றும் ஜனவரி 1-ந்தேதி ஆகிய 2 நாட்களில் இந்த வருடம் 300 கோடி ரூபாய் வரை வருமானம் வரும் என்று டாஸ்மாக் எதிர்பார்க்கிறது

    பொதுவாக பண்டிகை நாட்கள் வந்தால் தமிழகத்தில் மது விற்பனை அதிகரிக்கும். அதிலும் சென்னை, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மது விற்கப்படும். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாட்களில் அதிகமாக மது விற்பது வழக்கம்.

    அதற்கு ஏற்றபடி நேற்று காலையில் இருந்து தமிழகத்தில் மது விற்பனை மாஸாக நடந்தது. நேற்று காலை தொடங்கிய விற்பனை இப்போது வரை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    நேற்று மாலை

    நேற்று மாலை

    முக்கியமாக நேற்று மாலை மது விற்பனை மிக அதிக அளவில் சூடுபிடித்தது. சென்னையில்தான் தமிழகத்திலேயே மது விற்பனை அதிக அளவில் நடந்தது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாடிவிட்டு குடிக்க வேண்டும் என்பதற்காக பலர் மது வாங்கி சென்றார்கள்.

    என்ன வகை

    என்ன வகை

    அதிலும் சென்னையில் பீர் வகைகள் அதிகம் விற்பனை ஆனது. தற்போது ஆண்கள், பெண்கள் இடையே பீர் குடிப்பது அதிகரித்துள்ளது. இதனால் பீர் அதிகம் விற்பனை ஆகியுள்ளது. வோட்கா, விஸ்கி வகைகளும் அதிகமாக விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

    என்ன டார்கெட்

    என்ன டார்கெட்

    இந்த நிலையில் டிசம்பர் 31-ந்தேதி மற்றும் ஜனவரி 1-ந்தேதி ஆகிய 2 நாட்களில் இந்த வருட 300 கோடி ரூபாய் வரை வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் 200 கோடி ரூபாய் வரை வருமானம் வந்தது. இன்று அதைவிட அதிகம் ஆகும் என்று கூறுகிறார்கள். மக்கள் கூட்டமும் அதை உறுதிப்படுத்தி உள்ளது. நேற்று முழுக்க பலர் வரிசையில் நின்று மது வாங்கி சென்றார்கள்.

    ஏன் அதிகம்

    ஏன் அதிகம்

    இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 2-ந்தேதி எண்ணப்படுகிறது. அதனால் அன்று டாஸ்மாக் செயல்படாது. அதனால் இன்றே பலர் முன்கூட்டியே மது பாட்டில்களை வாங்கி வைக்கிறார்கள். இதனால் டாஸ்மாக் வருமானம் உச்சத்தை தொடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் எவ்வளவு வருமானம் வந்தது என்று இன்னும் 2 நாட்களில் தெரிய வரும்.

    English summary
    New Year 2020 Tasmac collection may reach 300 Crore rupees due to heavy rush.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X