சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உற்சாக மிகுதி.. சர்ரு புர்ருன்ணு அதிவேகத்தில் அலப்பறை.. 100 பைக்குகள் பறித்தது சென்னை போலீஸ்

Google Oneindia Tamil News

சென்னை: புத்தாண்டு பண்டிகையை மது உற்சாகத்தில் கொண்டாடிய பல இளைஞர்கள், சர்ரு புர்ருன்ணு அதிவேகத்தில் அலப்பறை செய்த காரணத்தால் அவர்களின் வாகனத்தை பறித்து கொண்டு அனுப்பி வைத்தது சென்னை போலீஸ்.

ஆம், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் அதிவேகமாக சென்றதாக, 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் நேற்று இரவு (இன்று அதிகாலை) பறிமுதல் செய்தனர்.

new year celebration: chennai police seized 100 more bikes from drunken youths

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பலத்த போலீஸ் கண்காணிப்பையும் மீறி தண்ணி அடித்துவிட்டு அதிக வேகத்தில் பைக் ரேஸ் செய்வதை பல இளைஞர்கள் வாடிக்கையாகவே வைத்திருந்தார்கள். இதனால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாக இருந்தது.

new year celebration: chennai police seized 100 more bikes from drunken youths

எனவே இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பலத்த கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை சென்னை போலீஸ் செய்திருந்தது. சென்னை முழுவதும் எல்.இ.டி (LED) விளக்குகள் பொருத்திய பேரிகார்டுகளை அமைத்து வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது உற்சாக மிகுதியில் அதிவேகமாக சென்றதாக 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தி வாகனங்களை பறித்தனர்.

new year celebration: chennai police seized 100 more bikes from drunken youths

டார்க்கெட்டை உயர்த்திய டாஸ்மாக்.. முச்சதம் அடிக்க திட்டம்.. மதுக்கடைகளில் அலைமோதும் குடிமகன்ஸ்!டார்க்கெட்டை உயர்த்திய டாஸ்மாக்.. முச்சதம் அடிக்க திட்டம்.. மதுக்கடைகளில் அலைமோதும் குடிமகன்ஸ்!

மேலும் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர்களைக் கொண்ட வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்த போலீசார் அவர்களை பிடித்து விசரணை நடத்தினர். இதனால் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் இந்த ஆண்டு பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லாமல் அமைதியாக முடிந்தது.

English summary
new year celebration: Chennai police seized 100 more bikes from drunken youths and bike racers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X