சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நள்ளிரவு 1 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் கூடவே கூடாது.. சென்னை போலீஸ் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டத்தில் ஈடுபட சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு முடிவடைந்து புதிய ஆண்டான 2020 ஜனவரி 1-ஆம் தேதி பிறக்கிறது. இதையொட்டி டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்க மக்கள் அனைவரும் தயாராகி விடுவர்.

New Year celebration: Restaurants should not allow to conduct at 1 am

இதையொட்டி சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனையும் கோயில்களில் வழிபாடும் நடத்தப்படும். மேலும் மெரினா, எலையட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இளைஞர்கள் கூடி புத்தாண்டை வரவேற்பர்.

அப்போது கூட்டம் கூட்டமாக குழுக்கள் குழுவாக கேக் வெட்டி ,பட்டாசு வெடித்து கொண்டாடுவர். இன்னும் சிலர் சென்னை மற்றும் ஈசிஆர் சாலைகளில் நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டை கொண்டாடுவர்.

முதலாளியிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய கோச்சானியன்.. 60 வயதை கடந்து லட்சுமியை கரம் பிடித்த தருணம் முதலாளியிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய கோச்சானியன்.. 60 வயதை கடந்து லட்சுமியை கரம் பிடித்த தருணம்

இதற்காக அங்கு கேளிக்கை நடனங்கள் நடத்தப்படும். அப்போது மதுபோதையில் நடனம் ஆடுவது, நீச்சல் குளத்தில் குளிப்பது உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிரது. மேலும் சிலர் பெண்களுடன் இந்த விடுதிகளில் தங்குவதால் தேவையற்ற பிரச்சினைகள் எழும்.

இதனால் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய இடத்தில் போலீஸார் உள்ளனர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர, கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளார்.

English summary
Chennai Police orders star hotels and restuarants not allow anyone to celebrate New year in the midnight 1 am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X