சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்.... உற்சாகத்தில் திளைத்த இளைஞர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... தலைவர்கள் வாழ்த்து- வீடியோ

    சென்னை: தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. ஆரவாரத்துடன் 2019 ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.

    சென்னை மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    2019.ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் இளைஞர்கள் நடனமாடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சில இடங்களில் நடிகர்,நடிகைகளின் மேடை நடனங்களும் இடம்பெற்றிருந்தன.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    மேலும் சென்னையில் உள்ள பல்வேறு பூங்காக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மனமகிழ் மன்றங்களில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கேக் வெட்டியும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    பெசன்ட் நகரில் கொண்டாட்டம்

    பெசன்ட் நகரில் கொண்டாட்டம்

    அதேபோல், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் குவிந்த ஏராளமானோர், ஆடிப்பாடி புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர்.

    கோவில்களில் சிறப்பு பூஜை

    கோவில்களில் சிறப்பு பூஜை

    புத்தாண்டையொட்டி அதிகாலையில் கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்டவற்றில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்

    தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்

    கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.

    உற்சாக வெள்ளம்

    டெல்லி, மும்பை, கோவா, பெங்களூரு, சிம்லா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தன. உற்சாக பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    English summary
    New Year celebrations were stamped across Tamilnadu. Welcoming the 2019 English New Year
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X