சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புத்தாண்டு நள்ளிரவில் மதுபோதையில் வாகனம் ஓட்டினால் உடனே கைது - காவல்துறை அறிவிப்பு

புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு மது அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டினால் கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்படுவார்கள் என்று போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: புத்தாண்டு தினத்தில் மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகே‌‌ஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

Recommended Video

    சென்னை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உடனே கைது.. காவல்துறையினர் கடும் எச்சரிக்கை..!

    சென்னையில் கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

    New Years Eve Drunk Driving Chennai Police Notice

    குறிப்பாக குடிபோதையில் வாகனங்களில் சென்று ரகளையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். அதே நேரத்தில் குடும்பத்துடன் தேவாலயங்களுக்கு செல்பவர்கள், கோவில்களுக்கு செல்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே சென்னை சாலைகளில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். சென்னையில் புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த பெருநகர காவல்துறை ஆணையர் மகே‌‌ஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

    போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில், இணை கமி‌‌ஷனர்கள் பாலகிரு‌‌ஷ்ணன், சுதாகர், பாண்டியன், லட்சுமி, துணை கமி‌‌ஷனர்கள் செந்தில்குமார், அசோக்குமார், குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு சாலைகளில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதனிடையே சென்னை சாலைகளில் நள்ளிரவு நேரத்தில் அதிவேகமாக வாகனங்களில் சென்ற 175 பேரும், அபாயகரமாக வாகனங்களில் சென்ற 50 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Greater Chennai Metropolitan Police has announced that drunk drivers will be arrested on New Year's Day. Chennai Metropolitan PoliceCommissioner Maheshkumar Agarwal has ordered the implementation of strict restrictions at night till midnight on New Year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X