India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உடலுறவின்"போது உடைந்துபோன அந்த "நரம்பு".. வெலவெலத்து போன புதுமண தம்பதி.. மிரண்டு போன மதுரவாயல்

Google Oneindia Tamil News

சென்னை: உடலுறவின்போது இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று தம்பதி இருவருமே எதிர்பார்க்கவில்லை.. மதுரவாயல் பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருநெல்வேலியை சேர்ந்தவர் சக்திவேல்.. 22 வயதாகிறது.. சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி காயலான் கடை நடத்தி வந்தார்.

இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.. மனைவி பெயர் ஆர்த்தி.. 20 வயதாகிறது.. இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த கல்யாணம் நடந்து முடிந்தது.. திருமணத்துக்கு பிறகு, தம்பதி 2 பேருமே மதுரவாயலில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலையில் பெண்ணின் வீட்டில் இருந்து போன் செய்திருக்கிறார்கள்.. ஆனால், ஆர்த்தி போன் எடுக்கவில்லை.. பிறகு, சக்திவேல் வீட்டில் இருந்தும் போன் செய்துள்ளனர்.. அவரும் எடுக்கவில்லை..

சக்திவேல்

சக்திவேல்

இதனால் குடும்பத்தினர் பதறி போய்விட்டனர்.. கடைக்கு போன் செய்து பார்த்துள்ளனர்.. அங்கேயும் ரிங் போயுள்ளது.. கடையை திறக்கவே இல்லை என்பது தெரியவந்தது.. இதனால், அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி சக்திவேல் வீட்டில் சென்று பார்க்க சொல்லி உள்ளனர்.. அவர்கள் வந்து கதவை தட்டியும் சக்திவேல் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.. இதனால் சந்தேகமடைந்து, நேராக மதுரவாயல் போலீசுக்கு போனார்கள்.. போலீசாரும் உடனடியாக விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்..

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

அப்போது கணவன், மனைவி 2 பேருமே ஃபேனில் தூக்குப்போட்டு சடலமாக தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்... பிறகு இருவரது உடலையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது போலீசார், உடனடியாக விசாரணையையும் மேற்கொண்டனர்.. தற்கொலை செய்து கொண்ட பெட்ரூமை சோதனையிட்டனர்.. அப்போதுதான் அந்த கடிதம் சிக்கியது.. இருவருமே சேர்ந்து அந்த கடிதத்தை தற்கொலைக்கு முன்பு எழுதியிருந்தனர்..

 ஆண்குறி

ஆண்குறி

அந்த கடிதத்தில் சக்திவேல் எழுதியிருந்ததாவது: "நாங்கள் உடலுறவு கொண்டோம்.. அப்போது என்னுடைய ஆண்குறியின் நரம்பு உடைந்து போய்விட்டது.. என்னால், குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை தேடி கொண்டுள்ளோம்.. இதில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று எழுதப்பட்டிருந்தது.. இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்..

உடலுறவு

உடலுறவு

இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, மனைவியுடன் உடலுறவு கொண்டபோது சக்திவேலின் ஆண்குறியில் நரம்பு உடைந்து விட்டதாலும், அதற்கு பிறகு அவரால் உடலுறவு கொள்ள முடியவில்லை.. அதற்காக ஆஸ்பத்திரிக்கும் சென்று சிகிச்சை எடுத்து கொள்ளாமல் இருந்துள்ளார்.. அத்துடன், தனக்கு குழந்தை பிறக்காது என்று இவரே ஒரு முடிவுக்கும் வந்துள்ளார்.. இதனால், அவமானமும், இயலாமையும் வாட்டி வதைத்து தொடர்ந்து மனஉளைச்சலிலும் இருந்துள்ளார்..

ஆண்குறி

ஆண்குறி

அதனாலேயே தற்கொலையை இவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தில் நிறைய எழுத்துப்பிழை இருக்கிறது.. இவர்கள்தான் அந்த கடிதத்தை எழுதினார்களா என்பதுகூட தெரியவில்லை.. அதனால் அதுகுறித்தும் முறையாக விசாரித்து வருகிறோம்.. மேலும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், அது தொடர்பான பிரச்சனை உறுதியாகும்.. அதனால் இப்போதைக்கு இதை சந்தேக மரணம் என்று கேஸ் பதிவு செய்துள்ளோம்.. விசாரணை தொடர்ந்து நடந்து வருகின்றது" என்றனர்.திருமணம்நடந்து 5 மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.

English summary
newly married couple commit suicide due to health reason near chennai சென்னையில் புதுமண தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X