சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கல்வெட்டில் எம்பி ரவீந்திரநாத்குமார் என போட்டது வீணாகாது போலயே.. எக்ஸிட் போல் கூறும் சேதி!

Google Oneindia Tamil News

சென்னை: தேனி லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார்தான் எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு கூறியுள்ளது.

தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தை பொருத்தவரை அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் மூவரும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வந்தனர்.

திமுக கூட்டணிக்கு 21.. அமமுகவிற்கு 5.. அதிமுகவிற்கு 12.. நியூஸ் எக்ஸ் சர்வேயில் ஷாக்! திமுக கூட்டணிக்கு 21.. அமமுகவிற்கு 5.. அதிமுகவிற்கு 12.. நியூஸ் எக்ஸ் சர்வேயில் ஷாக்!

தேர்தல் பிரசாரம்

தேர்தல் பிரசாரம்

பெரியகுளத்தில் விட்டதை தேனியில் பிடித்து விட வேண்டும் என தங்கதமிழ்ச் செல்வன் பெரும்பாடுபட்டார். அது போல் ஈரோட்டுக்காரரான ஈவிகேஎஸ் இளங்கோவனும் தேனி வந்தால் ஜெயலலிதா தங்கியிருந்த வீட்டில் தங்கி தேர்தல் பிரசாரம் செய்து வந்தார்.

வெற்றி

வெற்றி

இந்த நிலையில் இன்றைய தினம் இறுதி கட்ட தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில் நியூஸ் எக்ஸ் வெளியிட்ட கருத்து கணிப்பில் தேனி லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெறுவார் என குறிப்பிட்டுள்ளது.

வீணாகவில்லை

வீணாகவில்லை

தேனி மாவட்டம் குச்சனூர் காசி அன்னபூரணி ஆலயத்துக்கு நன்கொடை அளித்ததாக அமைக்கப்பட்ட கல்வெட்டில் கடந்த 16-ம் தேதியிட்டு ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரகுமார், ஜெயபிரதீப் குமார் ஆகிய பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அந்த கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி. என்று பொறிக்கப்பட்டிருந்தது.

முடிவுகள் வெளியாவதற்கு முன்பே

முடிவுகள் வெளியாவதற்கு முன்பே

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே இது போல் ரவீந்திரநாத்தின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவசர அவசரமாக அவரது பெயர் நீக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிவுகளும் அவருக்கு சாதகமாக வெளியாகிவுள்ளதால் கல்வெட்டில் பெயர் செதுக்கியது வீணாகவில்லை.

English summary
News X exit poll survey says that Deputy CM O.Paneerselvam's son O.P. Raveendranathkumar win in Theni Loksabha elections 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X