சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கதி கலங்க வைத்த இலங்கை குண்டுவெடிப்பு.. பூந்தமல்லியில் 3 பேர் கைது.. ஆவணங்கள், பென் டிரைவ் பறிமுதல்

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை பூந்தமல்லியில் தங்கியிருந்த மூன்று பேரிடம் என்ஐஏ சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தியது.

கடந்த 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் தற்கொலை படை தாக்குதலால் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இலங்கையில் ஊடுருவியுள்ளதால் இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தகுதி நீக்கத்திற்கு வைத்த செக்.. சபாநாயகருக்கு எதிராக திமுக மூவ்.. ஸ்டாலினின் ராஜதந்திர திட்டம்! தகுதி நீக்கத்திற்கு வைத்த செக்.. சபாநாயகருக்கு எதிராக திமுக மூவ்.. ஸ்டாலினின் ராஜதந்திர திட்டம்!

குடியிருப்பு

குடியிருப்பு

இந்த நிலையில் தேசிய புலனாய்வு பிரிவினர் சென்னை மண்ணடியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்படி சென்னை பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர்.

மூவர்

மூவர்

அங்கு தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர்கள் மூவரையும் ஒரு காரில் அழைத்து சென்றனர்.

வீடு

வீடு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த குடியிருப்பில் 30 ஆயிரம் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பினர் அந்த வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கைப்பற்றினர்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

குறிப்பிட்ட அந்த வீட்டில் 3 பெண்களும் ஒரு குழந்தையும் இருந்ததாக தகவல்கள் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததால் தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
National Intelligence Agency arrest 3 Srilankans and seized important documents and pen drive. It extends separch operation from Ramapuram to Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X