சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகுமா?.. சுகாதாரத் துறை ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    வேகமாக அதிகரிக்கும் இரண்டாம் அலை பாதிப்பு.. தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு விதிக்க வாய்ப்பு?

    தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

    மதக் கூட்டங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள், பேருந்துகளில் நின்று பயணம் செய்ய தடை, உணவகங்கள், டீக்கடைகள், வணிக வளாகங்களில் 50 சதவீத அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கடந்த 10-ஆம் தேதி முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டன.

    இரண்டாவது அலை

    இரண்டாவது அலை

    இந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இது போல் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 15 நாட்கள் முழு ஊரடங்கு, சனி, ஞாயிறு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என கட்டுப்பாடுகள் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

    கொரோனா கட்டுப்பாடுகள்

    கொரோனா கட்டுப்பாடுகள்

    அது போல் தமிழகத்திலும் கொரோனா கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.

    ஆலோசனை

    ஆலோசனை

    இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கொரோனா

    கொரோனா

    இரவு நேர ஊரடங்கு மட்டுமின்றி, உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்களை முழுமையாக மூடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. எனவே கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    English summary
    Night curfew will be imposed in Tamilnadu? Government discusses.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X