• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆ.. இந்த மூஞ்சியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. லண்டனில் தாடியுடன் சுற்றும் நீரவ் மோடி!

|
  லண்டனில் தாடியுடன் சுற்றும் நீரவ் மோடி!- வீடியோ

  சென்னை: எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே... அவர்தானா என்று ஒரு சந்தேகம்.. உற்றுபார்த்தால் அவரேதான்.. தாடி, முறுக்கு மீசை வைத்து கெட்டப் சேஞ்ச் ஆகி இருந்தார்... அதான் மோசடி செய்து தப்பி ஓடினாரே நீரவ் மோடி.. அவரேதான்.. ஹாயாக சுற்றி கொண்டிருக்கிறார் லண்டன் தெருக்களில்!

  இந்தியாவில் உழைத்து பணக்காரர்கள் எந்த அளவுக்கு ஃபேமஸ் ஆவார்களோ, அதே அளவுக்கு பண மோசடி செய்தும் ஃபேமஸ் ஆனவர்தான் நீரவ் மோடி. ஏனென்றால், அவர் மோசடி தொகை அவ்வளவு பெரியது!

  இவர் ஒரு வைர வியாபாரியாக இருந்தாலும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடனை வாங்கினார். வாங்கினதோடு சரி, திருப்பி தரும் பழக்கம் கொஞ்சமும் இல்லை. இதற்காகவே அவர் வெளிநாடுக்கு தப்பி ஓடிவிட்டார். இப்படி வெளிநாட்டுக்கு தப்பியோடிய இவர் ஆகட்டும், இவரது முன்னோடி விஜய் மல்லையா ஆகட்டும், இன்னும் இந்தியா வந்துசேர்ந்த பாடில்லை.

  2-ஆவது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரத்தை பாக். வெளியிடலாமே- இந்தியா கேள்வி

  ரெட் கார்னர்

  ரெட் கார்னர்

  ஆனால் இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருவதாக சொல்லப்பட்டு வருவதுடன் இவர்களின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இன்டர்போல் போலீஸாரால் ரெட் கார்னர் வழங்கப்பட்ட நபரும்கூட. நீரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாக அந்நாட்டு அரசு மத்திய அரசுக்கு ஏற்கனவே ஒரு தகவலை சொல்லியும் இருந்தது.

  லண்டன் வீதி

  லண்டன் வீதி

  இப்போது ஹாட் நியூஸ் என்னவென்றால், லண்டன் வீதிகளில் நீரவ் மோடி உலா வருகிறாராம். ஒருநாள் அவரை ஒரு செய்தியாளர் அடையாளம் கண்டுபிடித்துவிட்டிருக்கிறார். எப்படித்தான் அடையாளம் கண்டுபிடித்தாரோ தெரியாது, முழுசாக மாறி போயிருந்தார் நீரவ் மோடி.

  தாடி, முறுக்கு மீசை

  தாடி, முறுக்கு மீசை

  மழமழ முகத்துடன், கோட், சூட் போட்டுதான் நமக்கு நீரவ் மோடி உருவம் அறிமுகம். ஆனால் இப்போது மழமழவெல்லாம் காணாமல் போய் தாடி, முறுக்கு மீசை வைத்திருக்கிறாராம். அவர்தான் என்பதே முக அடையாளத்தில் தெரியவே இல்லையாம்.

  தி டெலிகிராப்

  தி டெலிகிராப்

  அந்த செய்தியாளர் பிரிட்டனை சேர்ந்த "தி டெலிகிராப்" என்ற நாளிதழில் பணி புரிபவராம். நீரவ் மோடியின் அடையாளத்தை கண்டுபிடித்து, நேரடியாக அருகில் சென்று பேசவும் ஆரம்பித்துவிட்டாராம். இது தொடர்பான வீடியோவையும் ஊடகம் மூலம் அவர் வெளியிட்டுள்ளார்.

  நோ கமெண்ட்ஸ்

  நோ கமெண்ட்ஸ்

  அதில், நீரவ் மோடி ஒரு காஸ்ட்லியான அப்பார்ட்மென்ட்டில் இருந்து வெளியே வருகிறார். அவரிடம் செய்தியாளர் கேள்விகளை கேட்க ஆரம்பிக்கிறார். "பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளீர்களா, அல்லது இந்தியாவுக்கு திரும்பும் திட்டம் உள்ளதா, இந்த நாட்டிலேயே இன்னும் எவ்வளவு காலம் இருப்பீர்கள்" என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார் செய்தியாளர். இதுக்கெல்லாம் நீரவ் மோடி பதில் சொல்வாரா என்ன? "சாரி.. நோ கெமண்ட்ஸ்" என்று சொல்லிவிட்டு போய் கொண்டே இருந்தாராம் நீரவ் மோடி

  வைர வியாபாரம்

  வைர வியாபாரம்

  நீரவ் மோடி தங்கியிருக்கும் அந்த அப்பார்ட்மெண்ட்டின் ஒரு ஃப்ளாட்டின் விலையே இந்திய மதிப்பில் 72 கோடியாம். இப்போது லண்டனிலும் வைர வியாபாரத்தை அவர் தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஒருவேளை லண்டனில்தான் நீரவ் மோடி இருப்பது கன்பர்ம் ஆனால் மத்திய அரசு உடனடி அதிரடியில் இறங்கும் என தெரிகிறது.

   
   
   
  English summary
  Lond report says Nirav Modi live in London in 72 crore Rs Apartment
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X