சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனசே சரியில்லை.. விரக்தி.. மன அழுத்தம்.. மருத்துவமனையில் அட்மிட் ஆன நிர்மலா தேவி!

நிர்மலாதேவிக்கு ஆஸ்பத்திரியில் மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: விரக்தியின் பிடியிலும், அதீத மன அழுத்தத்திலும் சிக்கி தவித்ததாக சொல்லப்பட்ட நிர்மலாதேவி, இப்போது மனநல ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உள்ளாராம்!

கடந்த 8-ம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவியின் வழக்கு விசாரணை நடந்தது. ஆனால் நிர்மலாதேவி வந்ததே லேட்டு!

வீட்டிலிருந்து பொறுமையாக நீட்டாக டிரஸ் செய்து கொண்டு வந்தவர், கோர்ட் வளாகத்தில் வினோதமாக நடக்க தொடங்கினார். அதுவரை நன்றாக இருந்த முடியை வெட்டி காதில் தொங்க விட்டு கொண்டார், பிறகு அவிழ்த்து கொண்டார், காமாட்சி அம்மன் முதல் தர்கா வரை ஒரே நாளில் அருப்புக்கோட்டையை தலைவிரி கோலத்துடன், அலற வைத்தார்.

சாக போறேன்.. 10 பக்கத்துக்கு லட்டர்.. கூடவே விரிவான விளக்கத்துடன் வீடியோ.. சேலத்தை அதிர வைத்த இளைஞர்சாக போறேன்.. 10 பக்கத்துக்கு லட்டர்.. கூடவே விரிவான விளக்கத்துடன் வீடியோ.. சேலத்தை அதிர வைத்த இளைஞர்

மனநலம்

மனநலம்

இதனால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரோ, மன அழுத்தத்தினால் இப்படி நடந்து கொண்டுள்ளாரோ என்ற சந்தேகமும், குழப்பமும் நமக்கு ஏற்பட்டது. ஆனால் மறுநாளே நார்மல் மோடுக்கு வந்தவர், "மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது, டாக்டரிடம் கூட்டிச் செல்லுங்கள் என்று அவரே வக்கீலுக்கு போன் செய்து கேட்டுக் கொண்டார். அந்த ஆடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டு மீடியாவிலும் வெளியானது.

வழக்கு

வழக்கு

இந்நிலையில், 4 நாளைக்கு முன்பு இதே வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் அப்போதும் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. தன் வக்கீல் மூலம் விடுப்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதனால் வழக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

உளவியல் சிகிச்சையை நிர்மலாதேவி பெற உள்ளதாகவும், இதற்காக ஒரு ஆஸ்பத்திரிக்கு அன்றைய தினம் சென்றதாகவும் தகவல்கள் வந்தன. ஆஸ்பத்திரிக்கு துணைக்கு யாருமே அவருடன் வரவில்லை, தனியாகத்தான் வந்திருந்தார். இந்நிலையில் மன அழுத்தத்தில் உள்ள நிர்மலாதேவி, ஆஸ்பத்திரியில் அட்மிட்டே ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

6 நாள்

6 நாள்

நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக நிர்மலாதேவி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் 6 நாட்கள் தங்கி அவர் அங்கு சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

விசாரணை

விசாரணை

அப்படியானால் வரும் 5-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரப்போகிறது. அதற்குள் சிகிச்சையும் முடிந்துவிடும். அன்றைய தினம் நிர்மலாதேவி எப்படி இருப்பார், அவரது மனநிலை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Lawer Pasumpon Panidiyan says that, Nirmala Devi has admitted for treatment in Nellai Mind Care Hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X