சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பல்கலை எச்ஆருக்கு இச்.. இச்.. காரை லாட்ஜாக்கிய நிர்மலா... வடிவேல் காமெடி போல் நீளும் உல்லாச லிஸ்ட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    விசாரணையில் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ

    சென்னை: பேராசிரியர் நிர்மலா தேவி நேற்று அளித்த வாக்குமூலத்தில் அவர் உல்லாசமாக இருந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக இருந்தது. இந்நிலையில் இன்றைய வாக்குமூலத்தில் கள்ளக்காதல் பட்டியல் நீண்டு கொண்டே செல்வது பகீர் கிளப்புகிறது.

    நிர்மலா தேவி சிபிசிஐடியிடம் அளித்த வாக்குமூலத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில் நான் விரித்த வலையில் மாணவிகள் விழவில்லை என்றவுடன் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என கூறிவிட்டு நான் வழக்கம்போல் புத்தாக்கப் பயிற்சிக்கு சென்று வந்தேன். மார்ச் 20-ஆம் தேதி தேவாங்கர் கல்லூரி செயலாளரிடம் இருந்து எனக்கு கடிதம் ஒன்று வந்தது.

    அந்தக் கடிதத்தை பார்த்தபோது, புத்தாக்கப் பயிற்சியை முடித்துவிட்டு, உடனடியாக கல்லூரிக்கு வந்து அறிக்கை அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் உடனே செயலாளருக்கு போன் செய்து இதுகுறித்து கேட்டபோது, 'நாளை கல்லூரிக்கு வாங்க, நேரில் பேசிக்கொள்ளலாம்' என்று கூறிவிட்டார்.

    அடுத்த வாரம் அடுத்த வாரம் "அசைன்மென்ட்".. கோட்வேர்ட் பயன்படுத்தி மாணவிகளை வளைக்கப் பார்த்த நிர்மலா தேவி!

    கடிதம்

    கடிதம்

    உடனே நான் பல்கலைக்கழகத்தில் உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரியை நேரில் சந்தித்து விவரத்தை சொன்னேன். அதற்கு அவர், பயிற்சி முடிந்தால் மட்டுமே அனுப்ப முடியும் என்று கூறியதுடன், இது தொடர்பாக கல்லூரி செயலாளருக்கு கடிதம் ஒன்றை என்னிடம் எழுதிக் கொடுத்து அனுப்பினார்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை

    பின்னர், அங்கிருந்து நான் தங்கியிருக்கும் இடத்திற்கு புறப்பட்டபோது, அவருடைய காரில் என்னை ஏற்றிக்கொண்டு நான் தங்கியிருந்த இடத்தில் கொண்டுபோய்விட்டார். அப்போது, அவர் என்னுடைய அறைக்கு வந்தார். நாங்கள் இருவரும் அறையில் முத்தமிட்டுக் கொண்டோம். பின்னர், அங்கிருந்து மீண்டும் அவரது காரில் புறப்பட்டோம். பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகேயுள்ள பஸ் ஸ்டாப்பில் என்னை அவர் இறக்கிவிட்டுச் சென்றார். நான் அங்கிருந்து பஸ்சில் புறப்பட்டு அருப்புக்கோட்டைக்குவந்துவிட்டேன்.

    வருகை பதிவேடு

    வருகை பதிவேடு

    அன்று இரவே அவர் கொடுத்த கடிதத்தை எடுத்துக்கொண்டு தேவாங்கர் கல்லூரி செயலாளர் வீட்டிற்கு சென்றேன். அப்பொழுது அவரது குடும்பத்தினர் நாளை கல்லூரிக்கு சென்று பார்க்குமாறு கூறிவிட்டனர். மார்ச் 21-ந் தேதி காலை தேவாங்கர் கலை கல்லூரிக்கு சென்றுவிட்டதால் நான் புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. கல்லூரிக்கு சென்று செயலாளரை சந்தித்தபோது, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடும்படியும், செயலாளருக்கு அந்த அதிகாரி கொடுத்த கடிதத்தை தலைமைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டு கணிதத்துறைக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.

    பணியிடை நீக்கம்

    பணியிடை நீக்கம்

    நான் செய்முறை தேர்வு நடந்து கொண்டிருந்த கம்ப்யூட்டர் அறைக்கு சென்றுவிட்டேன். மதியம் 12 மணியளவில் அலுவலக உதவியாளர் என்னிடம் வந்து அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். அலுவலக தலைமைப் பொறுப்பாளரை நான் சந்தித்தபோது என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அலுவலக கடிதம் ஒன்றை கொடுத்தார். அதை பிரித்து
    பார்த்தபோது, என்னை பணியிடை நீக்கம் செய்திருந்தது தெரியவந்தது. என்ன காரணத்திற்காக என்னை பணியிடை நீக்கம் செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எனவே, கல்லூரியில் இருந்த பேராசிரியர்களிடம் இதுகுறித்து கேட்டுப்பார்த்தேன். யாரும் காரணம் சொல்லவில்லை. உடனே நான் செயலாளரை சென்று பார்த்தபோது, கல்லூரி கமிட்டி முன்பு விசாரணை வரும்போது உங்கள் விளக்கத்தை கொடுக்கலாம் என்றுகூறினார்.

    விவரம் எனக்கு தெரியாது

    விவரம் எனக்கு தெரியாது

    அந்த ஆணையில் நான் அருப்புக்கோட்டையை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், என்னுடைய உடைமைகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து எடுத்து வருவதற்காக செயலாளரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு பல்கலைக்கழகம் வந்து பெண் அதிகாரி ஒருவரை சந்தித்து பணியிடை நீக்க ஆணையை காண்பித்தேன். பின்பு இதுசம்பந்தமாக முருகனையும் சந்தித்து உதவி கேட்டேன். அவரும் அனைத்துவித உதவிகளையும் செய்வதாக கூறினார். ஆனால், என்ன காரணத்திற்காக என்னை பணியிடை நீக்கம் செய்தார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது.

    ஆலோசனை

    ஆலோசனை

    இந்த நிலையில், மனிதவள மேம்பாட்டு அதிகாரியை சந்தித்து அவரிடம் அந்தக் கடிதத்தை காண்பித்தேன். கடிதத்தில், பணியிடை நீக்கத்திற்கான காரணம் குறித்து குறிப்பிடப்படாததால் என்னை தொடர்ந்து பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுமாறு கூறினார். மேலும், கல்லூரி நிர்வாகத்தை சந்தித்து காரணம் மற்றும் விளக்கத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு, அதற்கு ஏற்றார்போல் செயல்படுமாறு எனக்கு அவர் ஆலோசனை வழங்கினார். அடுத்த 2 நாட்கள் அங்கேயே தங்கி பயிற்சியை தொடர்ந்தேன்.

    போன் மூலம் தகவல்

    போன் மூலம் தகவல்

    அப்போது, எனது கணவரின் நண்பருக்கு போன் செய்து, சஸ்பெண்டு செய்யப்பட்ட தகவலை சொன்னேன். அவர் எனது கணவரிடம் போன் செய்து, கல்லூரி செயலாளரிடம் சஸ்பெண்டுக்கான காரணம் குறித்து கேட்கச் சொன்னார். எனது கணவரும் அங்கு சென்று காரணம் கேட்டபோது, கணிதத்துறையை சேர்ந்த மாணவிகள் 4 பேர் ஒரு ஒலிப்பதிவு நாடாவை கொடுத்து என் மீது புகார் மனு அளித்ததால், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கல்லூரி செயலாளர் கூறியுள்ளார். இதை என்னிடம் கணவரின் நண்பர் போன் மூலம் தெரிவித்தார்.

    உயரதிகாரிகள்

    உயரதிகாரிகள்

    நான் இந்தத் தகவலை முருகனிடம் போனில் தெரிவித்தபோது, அவர் கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறினார். மனிதவள மேம்பாட்டு அதிகாரி எனக்கு போன் செய்தார். அப்போது, என்னை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை சொன்னேன். பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகள் வேண்டும் என்று தொடர்ந்து கேட்டதால்தான், நான் இவ்வாறு பேசி மாட்டிக்கொண்டேன் என்றும் அவரிடம் சொன்னேன். அப்போது அவர் யாருக்காக கேட்டார்கள் என்று என்னிடம் கேட்டார். நான் உயர் அதிகாரிகள் என்று மட்டும் கூறினேன். பிறகு அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டேன்.

    இருவருடன்

    இருவருடன்

    மார்ச் 30-ந் தேதி வக்கீல் பாபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் எனக்கு போன் செய்து திருத்தணி சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கொடைக்கானல் வருவதாகவும், அவருக்காக என்னை அங்கு வரச் சொன்னார். நானும் பாபுவின் ஜூனியர் வக்கீல் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் காரில் புறப்பட்டு கொடைக்கானல் சென்றேன். போகும்போது, ராஜேஷ் என்னிடம் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். கொடைக்கானலில் ஒரு ஓட்டலில் 2 அறைகள் முன்பதிவு செய்திருந்தார்கள். ஓட்டல் பெயர் எனக்கு தெரியவில்லை. அடுத்தநாள் முழுவதும் நான் திருத்தணி சரணவன் மற்றும் பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன்.

    வார பத்திரிகை நிருபர்

    வார பத்திரிகை நிருபர்

    ஏப்ரல் 1-ந் தேதி என் செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் வாரப் பத்திரிகை ஒன்றில் இருந்து பேசுவதாகவும், மாணவிகளுடன் நான் பேசிய ஆடியோ பதிவு குறித்து பேச வேண்டும் என்றும் கூறினார். இதைக்கேட்டு நான் பதறிப்போய் பல்கலைக்கழக அதிகாரிக்கு போனில் இந்த தகவலை சொன்னேன். அப்போது அவர் என்னிடம், இந்த முருகனுக்கும், கருப்பசாமிக்கும் ‘சப்ளையிங் சர்வீஸ்' செய்வதே வேலை என்றும், துணைவேந்தர் அல்லது பதிவாளருக்குத்தான் ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கலாம் என்றும் கூறினார்.

    பணிநீக்கம்

    பணிநீக்கம்

    ஏப்ரல் 6-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று நான் முருகனை நேரில் சந்தித்தேன். அப்போது அவருடன் கருப்பசாமி, அவரது நண்பர் ராஜபாண்டியன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் உடன் இருந்தனர். நான் வாரப் பத்திரிகை நிருபர் போன் செய்த விவரத்தை சொன்னேன். அதற்கு முருகன், ‘எதுனாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்' என்று கூறினார். நான் முருகனிடம் துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் சொல்லி எங்கள் கல்லூரி செயலாளரிடம் பேச சொல்லச் சொன்னேன். அதற்கு முருகன் ‘சொல்கிறேன்' என்று சொன்னார். மேலும், நான் வேலை பார்த்த கல்லூரியில் இந்த விஷயம் குறித்து அவர் விசாரித்ததாகவும், கல்லூரியில் இருந்து என்னை பணிநீக்கம் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

    மனித வள அதிகாரி

    மனித வள அதிகாரி

    நான் ஏற்கனவே கொடைக்கானல் சென்றபோது, வக்கீல் ராஜேஷ் என்பவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக நான் தெரிந்துகொண்டதை முருகனிடம் சொல்லி கல்லூரி மாணவிகளின் விவரம் கேட்டு சொல்லவா என்று கேட்டேன். அதற்கு அவர், தற்போது சூழ்நிலை சரியில்லை என்று கூறி மறுத்துவிட்டார். அதைக்கேட்ட பின்னர், மனிதவள மேம்பாட்டு அதிகாரியை நேரில் சந்தித்தேன். அவரிடம் என்னுடைய பணியிடை நீக்கம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ஏற்கனவே பலமுறை என்னிடம் போனில் கூறியதுபோல, முருகன் மூலமாக பதிவாளர் மற்றும் துணைவேந்தரிடம் சிபாரிசு செய்யச் சொல்லுமாறு மறுபடியும் கூறினார்.

    உல்லாசம்

    உல்லாசம்

    பின்னர் என்னுடைய காரில் அவரை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு விருதுநகர் நோக்கி சென்றபோது, 4 வழிச்சாலையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, இருவரும் காரிலேயே உடலுறவு கொண்டோம். இந்த பிரச்சினை முடிந்தவுடன் நாம் இருவரும் எங்கேயாவது வெளியே செல்லலாம் என்று நான்கூற, அதற்கு அவர் கொடைக்கானல் போகலாம் என்றார். அவரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள அவரது வீட்டின் அருகே இறக்கிவிட்டுவிட்டு, அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

    English summary
    Professor Nirmala Devi has illegal relationship with more. Her Statement alledges.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X