சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது பொருளாதார மந்த நிலையா.. அதை அரசு ஒப்புக் கொண்டதா என்ன.. நிர்மலா கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகிறதா, அப்படி ஏதேனும் அரசு ஒப்புக் கொண்டதா என்ன? என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளது என்றார். இதுகுறித்து பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில் மோடி அரசின் தவறான நிர்வாகமே பொருளாதார மந்தநிலைக்கு காரணம். இந்திய பொருளாதாரம் இதைவிட வேகமாக வளரக் கூடிய சூழல் இருந்தும் மோடி அரசின் தவறான கொள்கையால் வளர்ச்சி குறைந்துள்ளது.

120 நாட்கள் இருக்கு.. கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. 19 லட்சம் பேருக்கு ஆறுதல் கூறிய அசாம் அரசு!120 நாட்கள் இருக்கு.. கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. 19 லட்சம் பேருக்கு ஆறுதல் கூறிய அசாம் அரசு!

பொருளாதாரம் மீளவில்லை

பொருளாதாரம் மீளவில்லை

உற்பத்தி துறையின் வளர்ச்சி வெறும் 0.6 சதவீதமாக இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது மோடி அரசு எடுத்த பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமல் ஆகியவற்றில் இருந்து இந்திய பொருளாதாரம் மீளவில்லை என்றார்.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்

இதுகுறித்து சென்னையில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளில் ஈடுபடாமல் அவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளாரா.

ஆலோசனை

ஆலோசனை

அவர் அப்படிச் சொல்லியிருக்கிறாரா. சரி நன்றி, நான் அவரது கருத்தை எடுத்துக் கொள்கிறேன். பொருளாதார மந்தநிலையில் உள்ளதை நாம் பார்த்தோமா, இல்லை அரசுதான் அதை ஒப்புக் கொண்டதா. நான் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். அவர்களது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டு வருகிறேன்.

 மந்தநிலை

மந்தநிலை

அவர்களுக்கு என்ன வேண்டும். அவர்கள் அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன. இவற்றை எல்லாம் நான் இரு முறை செய்துவிட்டேன். இதை மேலும் மேலும் செய்வோம். ஆட்டோமொபைல் துறை மந்தநிலைக்கு காரணம் மத்திய அரசு அல்ல; உச்சநீதிமன்றத்தின் முடிவே காரணம்.

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

மோட்டார் வாகனத்துறை அதிக பங்குகளுடன் செயல்பட அரசு விரும்புகிறது. உலக அளவில் பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் தான் உள்ளது. மக்கள் விருப்பப்படி தங்கம் இங்கு கிடைக்காததால்தான் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எந்த பொதுத்துறை வங்கியும் மூடப்படவில்லை.

பொதுத் துறை வங்கிகள்

பொதுத் துறை வங்கிகள்

நாட்டின் வளர்ச்சி, நிர்வாக வசதிக்காகவே பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுகின்றன. ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார் நிர்மலா சீதாராமன்.

English summary
Finance Minister Nirmala Sitharaman asks Is government acknowledges Economic slowdown? Are we witnessing slowdown?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X