சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'பவர்புல் நிர்மலா..' உலகின் சக்திவாய்ந்த பெண்கள் லிஸ்ட்டில் நிதியமைச்சர்.. 3வது முறையும் சாதனை

உலகின் சக்திவாய்ந்த பெண்ணாக நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார்

Google Oneindia Tamil News

உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் லிஸ்ட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்துள்ளார்.. தொடர்ந்து 3-ம் ஆண்டாக நிர்மலா சீதாராமன் இடம் பிடித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது... 2021ம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் முதல் இடத்தை பிரபல நன்கொடையாளர் மெக்கென்சி ஸ்காட் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகையானது, ஒவ்வொரு வருடமும் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் லிஸ்ட்டை வெளியிட்டு வருகிறது.. இந்த வருடமும் அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், பிரபல நிறுவனத்தின் தலைவர்கள், புகழ்வாய்ந்த அரசியல் தலைவர்கள், நன்கொடையாளர்கள், இப்படி ஒவ்வொரு பிரிவிலும் ஏராளமானோர் இடம்பெற்றிருப்பார்கள்.

'உலகளவில் இந்தியாவின் இமேஜை உயர்த்த பிரதமர் மோடி கடுமையாக உழைக்கிறார்'.. சொல்வது நிர்மலா சீதாராமன் 'உலகளவில் இந்தியாவின் இமேஜை உயர்த்த பிரதமர் மோடி கடுமையாக உழைக்கிறார்'.. சொல்வது நிர்மலா சீதாராமன்

லிஸ்ட்

லிஸ்ட்

இந்த லிஸ்ட்டில்தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 37-வது இடத்தை பிடித்துள்ளார்... இதற்கு முன்பும் 2 முறை இந்த லிஸ்ட்டில் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்துள்ளார்.. 2019-ல் 34-வது இடத்தையும், 2020-ல் 41-வது இடத்தையும் அவர் பிடித்திருந்தார்... இவரை தவிர, மேலும் 3 இந்திய பெண்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.. எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சிஇஓ ரோஷ்னி நாடார், பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா, நைகா நிறுவனத்தின் சிஇஓ ஃபால்குனி நாயர் ஆகியோர் ஆவர்.

அமேசான்

அமேசான்

இதில் முதலிடத்தை பிடித்தவர் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் என்பவராவார்.. 2வது இடத்தை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும், 3-வது இடத்தை ஐரோப்பியன் சென்டிரல் வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்டேவும், 4-வது இடத்தை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மேரி பர்ராவும், 5-வது இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் மனைவியான மெலிண்டா பிரெஞ்சு கேட்ஸும் பிடித்துள்ளனர்.

 சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

போர்ப்ஸ் இதற்கு முன்பு வெளியிட்ட 17 பட்டியலில், 15 முறை முதல் இடத்தில் இருந்த முன்னாள் ஜெர்மன் நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இடத்தை தான் இப்போது மெக்கன்சி ஸ்காட் பெற்றிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெண்களின் மொத்த சொத்து மதிப்பு 167 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 உலகின் சக்தி வாய்ந்த டாப் 10 பெண்கள் லிஸ்ட் இதுதான்:

உலகின் சக்தி வாய்ந்த டாப் 10 பெண்கள் லிஸ்ட் இதுதான்:

01. நன்கொடையாளர் மெக்கென்சி ஸ்காட்
02. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்
03. ஐரோப்பிய ரிசர்வ் வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்ட்
04. ஜெனரல் மோட்டார்ஸ் சி.இ.ஓ. மேரி பார்ரா
05. நன்கொடையாளர் மெலிண்டா பிரஞ்சு கேட்ஸ்
06. பிடிலிட்டி இன்வென்ஸ்மெண்ட்ஸ் சி.இ.ஓ. அபிகாயில் ஜான்சன்
07. சான்டாண்டர் செயல் தலைவர் அனா பாட்ரிசியா போடின்
08. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்
09. தைவான் அதிபர் சாய் இங் வென்
10. அசென்சர் சி.இ.ஓ. ஜூலி ஸ்வீட்

English summary
According to Forbes magazine, Union Finance Minister Nirmala Sitharaman is ranked 37th in the list of 100 most powerful women in the world . Nirmala Sitharaman has been on this list 2 times before.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X