சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வருகிறது "நிசார்கா".. ஆம்பனை தொடர்ந்து உருவாகும் அடுத்த புயல்.. எங்கு தாக்கும்? எப்போது தாக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Recommended Video

    ஆம்பனை தொடர்ந்து உருவாகும் அடுத்த புயல்.. எங்கு தாக்கும்?

    ஆம்பன் புயலை தொடர்ந்து புதிய புயல் இந்தியாவை தாக்க இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆம்பன் புயல் தாக்கியது. 165 கிமீ வேகத்தில் தாக்கிய இந்த புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இதனால் இரண்டு நாட்களுக்கு விடமால் அங்கு மழை பெய்தது.

    இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மிக மோசமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 வருடத்தில் அங்கு ஏற்படாத பொருளாதார பாதிப்பும் சேதமும் அங்கு ஏற்பட்டுள்ளது.

    வெட்டுக்கிளிகள் - பயங்கர நிலநடுக்கம்-பெரும் புயல்- அண்டை நாடுகளுடன் யுத்தம்- எச்சரிக்கும் பஞ்சாங்கம்வெட்டுக்கிளிகள் - பயங்கர நிலநடுக்கம்-பெரும் புயல்- அண்டை நாடுகளுடன் யுத்தம்- எச்சரிக்கும் பஞ்சாங்கம்

    புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

    புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

    இந்த நிலையில் தற்போது அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கொண்டே வருகிறது. இந்த தாழ்வு மண்டலம் கண்டிப்பாக புயலாக உருவெடுக்கும் என்று கூறுகிறார்கள். அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    எங்கு மாறும்

    எங்கு மாறும்

    ஓமன் அருகே அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதாவது கேரளா மற்றும் குஜராத் நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து வருகிறது. தெற்கு நோக்கி நகர்ந்து செல்ல செல்ல இந்த தாழ்வு பகுதி வலுவடையும். குஜராத் அல்லது மகாராட்டிரா அருகே வரும் போது இந்த தாழ்வு பகுதி புயலாக மாறும்.

    எப்போது கடக்கும்

    எப்போது கடக்கும்

    ஆனால் இந்த புயல் எங்கு கரையை கடக்கும் என்று விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் இந்த புயல் எப்போது கரையை கடக்கும் என்றும் தகவல் வெளியாகவில்லை. இந்த புயல் ஒருவேளை உருவானால், இதற்கு நிசார்கா என்று பெயர் வைக்கப்படும். ஆனால் இதனால் பெரிய பாதிப்பு வர வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறார்கள். ஜூன் 2-3ல் இந்த புயல் காரணமாக மழை ஏற்பட வாய்ப்புள்ளது.

    யார் வைத்த பெயர்?

    யார் வைத்த பெயர்?

    கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு , மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய பகுதிகள் இதனால் கடுமையான மழையை பெறும். தென் தமிழகத்தில் இந்த புயலால் மழை பெய்யும் என்றும் கூறுகிறார்கள். ஜூன் 3ம் தேதியில் இருந்து மழை பெய்யும் என்று கூறுகிறார்கள். நிசார்கா புயலுக்கு வங்கதேசம் பெயர் வைத்து இருக்கிறது. இதற்கு இயற்கை என்று அர்த்தம் ஆகும்.

    English summary
    Nisarga Storm: IMD warns of cyclone goes towards south Arabic ocean near Kerala and Gujarat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X