சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் அம்மா கூட போக மாட்டேன்.. நித்தியானந்தாவுடன் தான் இருப்பேன்.. பல் டாக்டர் ஹைகோர்ட்டில் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை:"நான் நித்தியானந்தாவுடன் தான் இருப்பேன்.. அவர்கூட தான் பணியாற்றுவேன்.. என் அம்மாவுடன் போக விருப்பமில்லை" என்று ஈரோடு பல் டாக்டரான முருகானந்தம் சென்னை ஹைகோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு நாச்சியப்பா வீதியைச் சேர்ந்தவர்கள், பழனிச்சாமி - லட்சுமி அம்மாள்.. இவர்களது ஒரே மகன் முருகானந்தம்.. கஷ்டப்பட்டு பல் டாக்டருக்கு படிக்க வைத்தார்கள்.

மேல்படிப்பு படிக்க 2003-ல் பெங்களூரு போனார்.. எதேச்சையாக நித்யானந்தா பேசும் சொற்பொழிவை கேட்டார்.. அவ்வளவுதான். அப்படியே ஸ்டிரைட்டாக ஆசிரமத்துக்கு போய்விட்டார்.. அங்கேயே தங்கிட்டார்.. அது மட்டுமில்லை.. "பிராணாசாமி" என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு சாமியாராகிவிட்டார்.

 ஒரே நேரத்தில் 2 பேருடன் காதல்.. வெட்டி கொண்ட கள்ள காதலர்கள்.. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஒரே நேரத்தில் 2 பேருடன் காதல்.. வெட்டி கொண்ட கள்ள காதலர்கள்.. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு

பெற்றோர்

பெற்றோர்

போன மகனை காணோமே என்று தேடியபோதுதான் பெற்றோருக்கு மகன் சாமியாராகிவிட்டது தெரிந்தது.. அதனால் 3 வருடம் போராடி.. 2006-ல் மகனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தனர். மேட்டூரில் ஒரு டென்ட்டல் கிளினிக் ஆரம்பித்தும் தந்தனர்... ஒரு வருஷம் நல்லாதான் இருந்தார் பல் டாக்டர்.. திரும்பவும் 2007-ல் பெங்களூரு போய்விட்டார்.

பிடதி

பிடதி

திரும்பவும் மகனை அழைத்து வர பெற்றோருக்கு தெம்பு இல்லை.. 2017-ல் முருகானந்தம் அப்பா பழனிசாமி இறந்துவிட்டார்.. அப்பா இறந்த செய்தி கேட்டதும், அன்னைக்கு ஒரே ஒருநாள் மட்டும் முருகானந்தம் வந்து.. சடங்குகளை செய்துவிட்டு திரும்பவும் பிடதியில் போய் அமர்ந்து கொண்டார்.

முருகானந்தம்

முருகானந்தம்

இதற்கு பிறகு லட்சுமி அம்மாளை மகனை கூட்டிவர முடியாமலேயே போய்விட்டது.. மகன் பாசம் அதிகரிக்கும்போதெல்லாம் அடிக்கடி பெங்களூரு போய் மகனை பார்த்துவிட்டு வருவார்.. ஆனால் அதற்கும் இப்போது கொஞ்ச நாளாக அனுமதி இல்லை.. முருகானந்தம் ஆசிரமத்தில் இல்லை என்றும் சொல்லி விட்டார்கள்.

உத்தரவு

உத்தரவு

அதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி அம்மாள், மகனைக் காணவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.. இதையடுத்து 4 வாரத்தில் முருகானந்தம் இருப்பிடம் குறித்து பதிலளிக்க நித்யானந்தாவுக்கும் ஈரோடு எஸ்பிக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.. பின்னர், ஈரோடு போலீஸ் முருகானந்தத்தை தேடி கண்டுபிடித்து வர பெங்களூருக்கு சென்றதாகவும் தகவல் வெளியானது.

சொந்த விருப்பம்

சொந்த விருப்பம்

இந்த நிலையில் சென்னை ஹைகோர்ட்டில் நித்தியானந்தா சீடர் முருகானந்தத்தை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, முருகானந்தம் நீதிபதிகளிடம் சொன்னதாவது: "என் சொந்த விருப்பத்தின் பேரில்தான் ஆசிரமத்திற்கு போனேன்.. அங்கு யாரும் என்னை அடைத்து வைக்கவில்லை.. நான் நித்தியானந்தாவுடன் தான் இருப்பேன் அவர்கூட தான் பணியாற்றுவேன்.. என் அம்மாவுடன் போக விருப்பமில்லை" என்றார்.

வழக்கு முடித்து வைப்பு

வழக்கு முடித்து வைப்பு

தன் சுய விருப்பப்படி இருப்பதாக முருகானந்தம் விளக்கம் தந்ததை அடுத்து.. சட்டவிரோத காவலில் அவர் இல்லை என்பதால் லட்சுமி அம்மாள் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கினை நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.. இந்த வழக்கும் முடிவுக்கு வந்தது. பின்னர் கண்ணீரும் ஏமாற்றத்துடனும் லட்சுமி அம்மாள் அங்கிருந்து திரும்பி சென்றார்.

English summary
nithiyananda devotee Erode dentist muruganandham missing case issue in chennai high court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X