மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக அறிவித்த நித்யானந்தா... ஆதினம் பயன்படுத்திய அறைக்கு சீல்
சென்னை: மதுரை ஆதீன மடத்தின் மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தன்னை அடுத்த மடாதிபதியாக சித்தரித்து நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆதீன மடத்தில் அவர் பயன்படுத்திய அறை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்ற காரணத்திற்காக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
தனக்கென்று ஒரு நாடு தன்நாடு தன் மக்கள் என்று கைலாசாவிற்கு ஓடிப்போனவர் நித்யானந்தா. தங்க நாணயங்கள் வெளியிட்டு தினம் தினம் யுடுயூப்பில் சத்சங்கம் நடத்தி வருகிறார். இந்தநிலையில்தான் மதுரை ஆதின மடத்தின் 293வது குருமகா சன்னிதானமாக தன்னை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் எழுதவில்லை.. முழுக்க முழுக்க பிடிஆரே தன் கைப்பட எழுதிய பட்ஜெட்
மதுரை ஆதீன மடத்தின் தற்போதைய பீடாதிபதி அருணகிரிநாதர் சுவாச கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதுரை ஆதீன மடத்தின் மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தன்னை அடுத்த மடாதிபதியாக சித்தரித்து நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைவ சமய திருமடம்
தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு முதல் ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார்.

இளைய மடாதிபதி நித்யானந்தா
அவர் கடந்த 2012 ஏப்ரல் 27 அன்று நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் இளைய பீடாதிபதியாக அறிவித்தார். அப்போது கடும் சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து, 2012 டிசம்பர் 19 அன்று அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றார். பின்னர், திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை இளைய ஆதீனமாக நியமித்தார். நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, பின் வாபஸ் பெறப்பட்ட உத்தரவுகள் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளில் கடந்த 2018 மே மாதம் நித்தியானந்தா மடத்திற்குள் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

நித்யானந்தா சர்ச்சை
அப்போது, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுக்களில், தன்னை 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டிருந்தார் நித்தியானந்தா. அந்த குறிப்புகள் நித்தியானந்தா முறைகேடாக தயாரித்தவை என ஆதீன மடம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டு இருந்தது. அந்த வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

292வது மடாதிபதிக்கு உடல் நலம் பாதிப்பு
இந்த சூழலில், மதுரை ஆதீன மடத்தின் தற்போதைய பீடாதிபதி அருணகிரிநாதர் சுவாச கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராகாத நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்து வருகிறது.

பேஸ்புக் பக்கத்தில் பதிவு
இந்நிலையில், மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டி முகநூல் பக்கத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும் மற்றும் ஆன்மீக ரீதியான, மத ரீதியான சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் பெற்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நித்யானந்தா.

பரபரப்பு அறிக்கை
ஆதீன மடத்தின் சொத்துக்கள் பலவற்றை குத்தகைக்கு கொடுத்த விவகார வழக்குகளும் உயர்நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ள நிலையில், தன்னை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதியாக குறிப்பிட்டு நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை மீண்டும் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆதீன மடம் உரிய விளக்கம் அளித்து மடாதிபதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

பூட்டி சீல் வைப்பு
மதுரை ஆதீனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மடத்தில் உள்ள அவரது அறையை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்ற காரணத்திற்காக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மடத்தின் சொத்து விபரங்கள் அடங்கிய பத்திரங்கள், விலை உயர்ந்த நகைகள் முக்கிய ஆவணங்கள் உள்ளதால் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

நித்யானந்தா வருவாரா
நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, பின் வாபஸ் பெறப்பட்ட உத்தரவுகள் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளில் கடந்த 2018 மே மாதம் நித்தியானந்தா மடத்திற்குள் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுக்களில், தன்னை 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டிருந்தார் நித்தியானந்தா. அந்த குறிப்புகள் நித்தியானந்தா முறைகேடாக தயாரித்தவை என ஆதீன மடம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டு இருந்தது. அந்த வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் தன்னை 293வது மடாதிபதியாகக் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மடாதிபதியாக அறிவித்துள்ள நித்யானந்தா கைலாசா நாட்டை விட்டு மதுரைக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.