சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சன்னையே ஸ்டாப் செய்த நித்தியானந்தா.. ஸ்டன்னிங் பேச்சை கேளுங்க.. வெரி ஃபண்ணி வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    சூரியனையே நிறுத்திய நித்தியானந்தா! நகைச்சுவை வீடியோ

    சென்னை: உதயசூரியனை தான் லேட்டாக உதிக்கச் செய்ததாக நித்தியானந்தா தனது சிஷ்யர்களிடம் விளக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    நித்தியானந்தா சூரியனுக்கே உத்தரவு போட்டதாலும் அந்த சூரியனும் இவரது பேச்சை பயந்து கொண்டு கேட்டதாகவும் பக்தர்களிடையே சொற்பொழிவாற்றியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் நித்தியானந்தா கூறுகையில் ஒவ்வொரும் நாளும் சூரியன் உதயத்துடன்தான் தொடங்கும். இன்று எத்தனை பேர் பார்த்தீர்கள் என தெரியவில்லை. தியானம் செய்வதற்கு சற்று நேரம் ஆகிவிட்டது. அது சூரியன் உதயமாவதற்கு முன்னர் செய்ய வேண்டும். சற்று லேட்டாகிவிட்டது.

    40 நிமிடங்கள்

    அப்போது நான் சூரியனுக்கு ஒரு உத்தரவிட்டேன். நான் தியானம் செய்து முடிக்கும் வரை வெளியே வரக் கூடாது என கூறிவிட்டேன். இதனால் என் பேச்சை கேட்டுக் கொண்ட சூரியன், இன்று 40 நிமிடங்கள் தாமதமாக உதயமானது.

    நேரம் பதிவாகியிருக்கும்

    நேரம் பதிவாகியிருக்கும்

    உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பிரிட்டிஷ் நேரப்படி சூரியன் உதயமான நேரத்தை பாருங்கள். கூகுள் என ஒரு வெப்சைட் இருக்கிறது. அதில் போய் இன்று சூரியன் உதயமாக இருந்த உத்தேச நேரமும், உண்மையில் சூரியன் உதயமான நேரமும் பதிவாகியிருக்கும்.

    நிச்சயம்

    நிச்சயம்

    நீங்கள் அதை பாருங்கள். இது நிச்சயமான உண்மை. நான் தியானத்தை முடித்துவிட்டு வெளியே வந்தேன். அப்போதுதான் சூரியன் கிழக்கு திசையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தது.

    மெய்மறந்து

    மெய்மறந்து

    சூரியன் தாமதமாக உதயமானது மேகக் கூட்டங்களால் அல்ல என நித்தியானந்தா விவரித்தார். இதை கேட்ட போது அங்கு மெய்மறந்து காணப்பட்ட பக்தர்கள் கைதட்டி வரவேற்றனர்.

    English summary
    Nithyananda claims that he ordered Sun to rise 40 min late because he was doing meditation and sun also obeyed!
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X