India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐயோ, அடிக்கிறாங்க, கிள்ளுறாங்க.. குழந்தையாகவே மாறிய நித்யானந்தா.. என்னென்ன சொல்றாரு பாருங்க..!

Google Oneindia Tamil News

சென்னை : சாமியார் நித்யானந்தா குறித்த ஆவணப்படம் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ள நிலையில், டிஸ்கவரி+ ஆப்ளிகேசனை பழிவாங்குவது குறித்து சின்னப்பிள்ளத் தனமால்ல இருக்கு என்பதைப் போல, பக்தர்களுக்கு ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார் நித்தி.

பாலியல் பலாத்காரம், கடத்தல், மோசடி போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

சப்ஜெக்ட்க்கு பேச்சு வந்துருச்சு..பார்ஃமுக்கு வந்த நித்யானந்தா! இதற்காகத்தான் சமாதியில் இருந்தாராம்!சப்ஜெக்ட்க்கு பேச்சு வந்துருச்சு..பார்ஃமுக்கு வந்த நித்யானந்தா! இதற்காகத்தான் சமாதியில் இருந்தாராம்!

சாமியார் நித்யானந்தா

சாமியார் நித்யானந்தா

இதுகுறித்து நித்யானந்தா தனது கைப்பட எழுதிய கடிதத்தோடு வெளியிட்ட பதிவில், நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். 27 டாக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறியிருந்தார். அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை. எனக்கு தூக்கம் வரவில்லை என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது.

மோசடி குறித்து ஆவணப்படம்

மோசடி குறித்து ஆவணப்படம்

இந்நிலையில் சர்வதேச அளவில் பிரபலமான டிஸ்கவரி பிளஸ் சேனல் நித்தியானந்தா குறித்த ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. the daughter joined a cult என்ற பெயரில் வெளியான அந்த ஆவணப்படத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக தன்னிடம் சீடர்களாக இருப்பவர்களை ஆண் பெண் என்ற பேதமின்றி நித்யானந்தா பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாகவும் பலரை தனது வலையில் வீழ்த்தி அவர்களது பணத்தை பறித்துக் கொண்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பி வருகின்றன.

டிஸ்கவரி+ ஆப்

டிஸ்கவரி+ ஆப்

இந்நிலையில் டிஸ்கவரி+ ஆப்ளிகேசனை பழிவாங்குவது குறித்து சின்னப்பிள்ளத் தனமால்ல இருக்கு என்பதைப் போல, பக்தர்களுக்கு ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார் நித்தி. இதுகுறித்து அவர் பக்தர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில்,"தொடர்ந்து இந்த குருமார்களையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் டிஸ்கவரிப்ளஸ் சேனல் வெளிநாடு மதமாற்று கும்பலிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு போலி ஆவணப்படம் தயாரித்து தொடர்ந்து இந்து குருமார்களின் மீதும் சுவாமிஜி அவர்களின் மீதும் வெறுப்புணர்வு பிரச்சார விளம்பரங்களை முகநூல் , யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து போலி ஆவண விளம்பரங்களை தொடர்ந்து பரப்பி வருகின்றது. இந்த டிஸ்கவரி ப்ளஸ் சேனலை புறக்கணிப்போம் வாருங்கள்.

முடக்க வேண்டும்

முடக்க வேண்டும்

நீங்கள் செய்ய வேண்டிய செயல்கள்.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ப்ளேஸ்டோரில் டிஸ்கவரி ப்ளஸ் என்ற ஆப்பை புறக்கணிப்போம் வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளதோடு, அதனை டவுன்லோடு செய்து ரிவ்யூவில் இந்த சேனல் தொடர்பாக உங்களது கருத்துக்களை பதிவிடவும்.அடுத்து மேலே வலது வலது புறத்தில் மூன்று புள்ளிகள் இருக்கும் அதனை கிளிக் செய்து, இரண்டாவது ஆப்ஷனைசெலக்ட் செய்யவும் அடுத்து வரும் ஸ்கிரீனில் மூன்றாவது ஆப்ஷனை செலக்ட் செய்து சப்மிட் கொடுக்க வேண்டும். " என கூறியுள்ளார். இது என்னை கிள்ளுறான் நானும் கிள்ளி வைப்பேன் என்பது போல் இருக்கிறது என்கின்றனர் நெட்டிசன்கள்.

English summary
While the documentary on preacher Nithyananda has revealed many truths, Nithyananda has given an idea to the devotees, like childish to take revenge on the Discovery+ application.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X