சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா

Google Oneindia Tamil News

சென்னை: பொறுத்தது போதும் பொங்கி எழு என தனது சீடர்களை ஞான போருக்கு நித்யானந்தா வீடியோ மூலம் அழைத்துள்ளார்.

உலகில் எங்கிருக்கிறார் என தெரியாமல் அன்றாடம் வீடியோ வெளியிட்டு வரும் நித்யானந்தா தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது முன்னாள் சீடர் தஞ்சை மாவட்டம் விஜய் தனக்கு நித்யானந்தா பாலியல் தொந்தரவு அளித்தார் என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த புகாருக்கு நித்யானந்தா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. புதிய வீடியோவில் நித்யானந்தா கூறுகையில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நோ சூடு, நோ சொரணை, நோ பாதர்.. யார் என்ன திட்டினாலும் அவர்களிடம் சீடர்கள் அன்பை காண்பிக்க வேண்டும்.

நடிகர்கள்

நடிகர்கள்

அமைதியாக இருக்க வேண்டும். திட்டுபவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும். யாரேனும் திட்டினால் ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிடுங்கள். புரிகிறதா.

தேவைக்கேற்ப இல்லை

தேவைக்கேற்ப இல்லை

பெரிய பெரிய ஹீரோக்களுக்கெல்லாம் பஞ்ச் டயலாக் கொடுக்க வேண்டும் என்றால் விசில் அடித்து கேட்கும் ரசிகர்கள் வேண்டும். ரசிகர்களின் தேவைக்கேற்ப நடிகர்கள் பஞ்ச் டயலாக் கொடுப்பார்கள். நான் பேசுவது தேவைக்கேற்ப அல்ல.

பயந்தாங்கோலிகள்

பயந்தாங்கோலிகள்

கடவுளின் அழுத்தத்தினால்தான். கேட்பவர்களின் விருப்பத்திற்காக நான் பேசவில்லை. சொல்லப்படுகிற சத்தியத்தின் சக்தியினால் பேசுகிறேன். அன்றிலிருந்து இன்று வரை இதே கதைதான் நடக்கிறது. பார்வையாளர்களாக பயந்தாங்கோலிகள் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.

வென்றாருக்கு கைலாசமும் உண்டு

வென்றாருக்கு கைலாசமும் உண்டு

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். வென்றாருக்கும் வரலாறு உண்டு. தோற்றாருக்கும் வரலாறு உண்டு. பார்த்துக் கொண்டிருந்த பைத்தியங்களுக்கு வரலாற்றில் ஒரு வரிக் கூட கிடையாது. இறங்குகள், இறங்குகள் இந்த ஞான போரில்! வென்றாலும் கைலாசம் உண்டு. தோற்றாலும் கைலாசம் உண்டு. பொறுத்தது போதும் பொங்கி எழு என்றார் நித்யானந்தா.

English summary
Nithyananda releases new video asking his disciples to come to wisdom war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X