சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கைலாசாவில் இவங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்பேன் – ஹோட்டல் அதிபருக்கு நித்யானந்தா பதில் !!

கைலாசா நாட்டின் தர்மசாஸ்திரம் எழுத ஆலோசனை சொல்பவர்களுக்கு கைலாசா ரத்னா விருதும் 100 பொற்காசுகளும் பரிசாக வழங்கப்படும் என்று நித்யானந்தா கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கைலாசா நாடு அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மதுரை ஹோட்டல் உரிமையாளருக்கும், திருச்சி ஜவுளிக்கடை உரிமையாளருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ளார் நித்யானந்தா. அதே போல கைலாசா தர்மசாஸ்திரம் எழுத நல்ல ஆலோசனைகள் சொல்பவர்களுக்கு கைலாசா ரத்னா விருதும் 100 கைலாசா பொற்காசுகளும் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் நித்யானந்தா.

Recommended Video

    Nithyananda Reply To Hotel Owner | Kailasa-வில் முன்னுரிமை யாருக்கு? | Oneindia Tamil

    இந்தியாவில் இருந்து தலைமறைவானதாக கூறப்படும் நித்யானந்தா இப்போது கைலாசா என்ற நாட்டிற்கு ராஜாவாக இருக்கிறார். தினசரியும் ஒரு வீடியோ என்று யுட்யூப் மூலம் அப்லோடு செய்கிறார். விநாயகர் சதுர்த்தி நாளில் கைலாசா நாட்டின் நாணயங்களையும் அறிமுகம் செய்தார்.

    கால் காசு முதல் பத்து காசு வரை அறிமுகம் செய்துள்ள நித்யானந்தா 2 கிராம் தங்கம், 5 கிராம் தங்கம் தொடங்கி 116.638038 கிராம் எடை கொண்ட தங்கம் வரை காசுகளை அறிமுகப்படுத்தியுள்ளார். ஏன் கைலாசா நாடு ஆரம்பித்தேன். என்னென்ன சிறப்பம்சம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    வெறும் 8 நாட்களில்.. 5 லட்சம் கேஸ்கள்.. இந்தியாவில் தீவிரம் எடுக்கும் கொரோனா.. ஷாக் புள்ளி விவரம்!வெறும் 8 நாட்களில்.. 5 லட்சம் கேஸ்கள்.. இந்தியாவில் தீவிரம் எடுக்கும் கொரோனா.. ஷாக் புள்ளி விவரம்!

    இந்தியாவில் இருந்து துரத்தப்பட்டேன்

    இந்தியாவில் இருந்து துரத்தப்பட்டேன்

    எனக்கு தெரிந்ததெல்லாம் மீனாட்சிதான் அம்மா மீனாட்சி மதுரை மீனட்சிதான். அவள் கொடுத்த அருளும் தீர்வும்தான் இந்த கைலாசம்.
    என்னிடம் இருந்து என்னிட அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. நான் இந்தியாவில் இருந்து துரத்தப்பட்டேன் வேறு வழியில்லாமல்
    நான் இந்த கைலாயத்தை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

    ஜனவரிக்குள் பாராளுமன்ற அமைப்பு

    ஜனவரிக்குள் பாராளுமன்ற அமைப்பு

    இந்து பாராளுமன்றத்தை நிறுவி இந்து மதத்தின் நிர்வாகங்களையும் மதம் சார்ந்த நிர்வாகங்கள் நிர்ணயங்கள் கருத்துக்களை தொகுத்து உலகத்திற்கான மாதிரி அரசை உருவாக்குவோம். அடுத்த ஆறு மாதங்கள் அந்த வேலைகள் நடைபெறும். ஜனவரிக்குள் முடித்து விட வேண்டும். சிவ ராத்திரிக்கும் முழு வரையும் மாதிரியும் வெளியிடப்படும்.

    100 பொற்காசுகள் பரிசு

    100 பொற்காசுகள் பரிசு

    பரமசிவன் பேரருளால் இந்த திட்டத்திலும் வெற்றியடைவோம். இப்போது பார்வையாளர்களாக இருப்பவர்கள் பொருளாதார கொள்கை சார்ந்தோ, பாராளுமன்றம் சார்பாக கருத்துக்களை கூறுங்கள் வரவேற்கிறோம். உங்களுடைய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உங்களின் பெயரை குறிப்பிட்டு எங்களின் தர்ம சாஸ்திரத்தின் பாகமாக மாற்றிக்கொள்கிறோம். உங்கள் ஆலோசனைகளை [email protected] என்ற மெயில் ஐடிக்கு அனுப்பலாம். நல்ல ஆலோசனைகள் சொல்பவர்களுக்கு கைலாசா ரத்ன விருதும் 100 பொற்காசுகளும் பரிசளிக்கப்படும்.

    கைலாசா எங்கே இருக்கிறது

    கைலாசா எங்கே இருக்கிறது

    கைலாசம், இ பாஸ்போர்ட், இ சிட்டிசன்ஷிப் அனைவருக்கும் வழங்குகின்றோம். இ சிட்டிசன் ஷிப் வேண்டுமென்று நினைத்தாலும் அப்ளை பண்ணலாம். கைலாசத்தை உருவாக்கும் முயற்சியில் அனைவருக்கும் நன்றி என்று சொன்ன நித்யானந்தா, கைலாசம் எங்கே இருக்கிறது என்று கூடிய விரைவில் சொல்வேன் என்றும் சொல்லியிருந்தார்.

    கைலாசாவில் யாருக்கு முன்னுரிமை

    கைலாசாவில் யாருக்கு முன்னுரிமை

    இந்தநிலையில்தான் கைலாசாவில் ஹோட்டல் வைக்க இடம் கேட்டு லெட்டர் போட்டிருந்தார் மதுரை ஹோட்டல் அதிபர். அதற்கு பதில் சொல்லியிருக்கும் நித்யானந்தா. மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை சேர்ந்தவர்களுக்கு கைலாசா நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மதுரை ஓட்டல் அதிபர் குமார் மற்றும் திருச்சி ஜவுளிக்கடை அதிபர் கைலாசாவில் தொழில் தொடங்க முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார். மேலும், தனது சொத்துக்களை மதுரை, திருவண்ணாமலைக்காக எழுதி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Nithyananda said that the owner of Madurai Hotel, Trichy Textile Shop after Kailash was recognized by the country Nithyananda said the owner would also be given priority. As well as to write Kailash Dharmashastra. Nithyananda also announced that the Kailasa Ratna Award and 100 Kailasa Gold Coins will be given away to those who give good advice.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X