சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் செத்து போய்ட்டேன்.. இனிமே தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்.. கைலாசாவையும் கட்டிட்டேன்: நித்தியானந்தா

கைலாசா வேலை நிறைவடைந்துவிட்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "நான் செத்து போய்ட்டேன்.. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை அப்படித்தான்.. இனிமேல் நான் தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்.. எனக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை.. கைலாசாவை கட்டி முடிச்சிட்டேன்" என்று சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிப்பவர் நித்தியானந்தா.. வழங்கப்பட்ட ஜாமீனும் ரத்தாகி விட்டது.

nithyananda says about tamilnadu

திரும்பவும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டும் பிடிக்கப்பட்டுள்ளது.. இவர் எங்கிருக்கிறார் என்று இன்னமும் நம் போலீசார் தேடி கொண்டிருக்கும் நிலையில், எதை பற்றியும் கவலைப்படாமல், நித்யானந்தா தினம் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலையும் எனில் உங்கள் ரசிகர்கள் யார்? இது எப்படி இருக்கு? ரஜினியை ஓட்டிய சீமான்சட்டம் ஒழுங்கு சீர்குலையும் எனில் உங்கள் ரசிகர்கள் யார்? இது எப்படி இருக்கு? ரஜினியை ஓட்டிய சீமான்

சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் அவர் சொன்ன சுருக்கம் இதுதான்: "கைலாசத்திற்கான பணிகள் முடிந்துவிட்டன.. ஆனால் அது குறித்து வேற எந்த தகவல்களையும் தர போவதில்லை.. 20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.. சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கி விட்டன.

என்னுடைய மரணத்திற்கு பிறகு என் சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துள்ளேன்... அது தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஊர்களின் குரு பரம்பரைகளுக்கு தான் சென்று சேரும்.. தமிழ்நாட்டுக்கும் எனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை.. தமிழ்நாட்டுக்கு இனிமேல் வரப்போவதுமில்லை.. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை தான் செத்து போய்ட்டேன்.

Recommended Video

    நாம இரண்டுபேரும் பிரிந்தால் மூலலிங்கம் அழியும்... பரலி சொல்கிறார் நித்யானந்தா

    நான் இறந்தாலும், என் உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான் அடக்கம் செய்யப்பட வேண்டும்.. வாடிகனை போல இந்து மதத்திற்கு என ஒரு நிலத்தை உருவாக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது" என்கிறார்.. இதனால் நித்யானந்தா பக்தர்களும், விசுவாசிகளம் குதூகலமடைந்துள்ளனர்.. அந்த கைலாசா எப்படி இருக்கும், அதை பார்க்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பு எப்போது வருமோ என்றும் ஆவலுடன் காத்துள்ளனர்!!

    English summary
    samiyar nithyananda says about tamilnadu and his kailasa construction work
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X