சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருவண்ணாமலையில் இரவில் பிச்சை எடுத்து வாழ்ந்த அன்னக்காவடி வாழ்க்கைதான் பெருமை: நித்தியானந்தா குபீர்

Google Oneindia Tamil News

சென்னை: திருவண்ணாமலையில் இரவில் தாம் பிச்சை எடுத்து வாழ்ந்த அன்னக்காவடி வாழ்க்கைதான் எனக்கு பெருமை என்கிறார் சர்ச்சைகுரிய சாமியார் நித்தியானந்தா.

Recommended Video

    நித்தியானந்தா - அன்னக்காவடி வாழ்க்கைதான் பெருமை | காமம் கடவுளின் பார்வையில்

    இந்தியாவில் பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி சர்ச்சை சாமியார் நித்தியானந்தா. ஆனால் வெளிநாடு ஒன்றில் பதுங்கிக் கொண்டு கைலாசா என்ற இந்துநாட்டை உருவாக்கிவிட்டேன்; பொற்காசு அடித்துவிட்டேன் என ஒவ்வொருநாளும் அடித்துவிட்டு வருகிறார்.

    Nithyananda speaks his earlier Life in Thiruvannamalai

    இதனிடையே காமம் கடவுளின் பார்வையில் தமது பக்தர்களுக்கு நித்தியானந்தா நிகழ்த்திய சொற் பொழிவில்தான் பிச்சை எடுத்து வாழ்ந்த வாழ்க்கை தொடர்பாக சிலாகித்து பேசியிருக்கிறார் நித்தியானந்தா. நித்தியானந்தாவின் பேச்சின் சுருக்கம்:

    பரமசிவபரம்பொருளின் பேரருளால் என் அய்யன் சொக்கநாதன் திருவாய் மலந்தருளிய கலவியல் என்னும் சத்தியத்தை ''காமம் - கடவுளின் பார்வையில்'' என்னும் தொடர் சத்சங்கமாக தமிழில் உரைக்கின்றேன். உயிர் நமக்குள் பொங்கும் பொழுது எப்படி அதை பால் இனத்தாலே பழுதுபடுத்துகிறோம் என்று புரிந்துகொள்ளுங்கள். ஆன்மா என்னும் நிறைநிலையை உடல் என்ற குறை உணர்விலே சுருக்கிகொள்கின்றோம். இது தான் நமக்கு நடக்கும் மிகப்பெரிய அழிவு.

    தொல்காப்பியர் ஜெயினரா.. வெடித்த ஓலைச்சுவடி சர்ச்சை.. கொதிக்கும் தமிழ் ஆர்வலர்கள்தொல்காப்பியர் ஜெயினரா.. வெடித்த ஓலைச்சுவடி சர்ச்சை.. கொதிக்கும் தமிழ் ஆர்வலர்கள்

    உடல் என்ற உணர்ச்சியை நோக்கி வாழும் பொழுது ஆசை, அச்சம் என்ற இரண்டு கூறுகளாக நாம் பிளவுபடுட்டு வாழ்வோம். ஆனால் ஆன்மா என்ற உணர்வில் வாழும் பொழுது நான் பரமசிவம் என்ற சத்தியத்தை நோக்கி நம் வாழ்க்கை இருக்கும். என் வாழ்வை வெளியில் இருந்து பார்பவர்களுக்கு தான் முரண்பாடாக தெரியும்.

    Nithyananda speaks his earlier Life in Thiruvannamalai

    நான் என்னை பிச்சைக்காரனாக சொல்லும் போது நான் என்னை குறையாக நினைத்து சொல்லவில்லை., அதே போல் என்னை பரமசிவம் என்று சொல்வது நான் உங்களை விட அதிகமாக காட்டுவதற்கல்ல. திருவண்ணாமலையில் இரவிலே பிச்சை எடுத்து வாழ்ந்த அன்னக்காவடி வாழ்க்கையை நான் மிகுந்த பெருமையாக கருதுகிறேன். இது வரலாற்றிலேயே எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

    நான் பிச்சை எடுத்த எச்சசோறு என்று சொல்வது எனக்கு நடந்த பயிற்சி; நான் என்னை பரமசிவம் என்று சொல்லும் பொழுது எனக்கிருக்கும் பொறுப்பை நினைத்து கொள்கின்றேன். இதில் என்னுடைய அடையாளங்களின் முரண்பாடு இல்லாமல் வாழ்கிறேன். இது தான் என் ஆன்ம பலம்! அடையாளங்களால் பாதிக்கப்படாமல் வாழ்வது தான் ஆன்ம பலம்! பெருமான் அளித்த கலவியல் சார்ந்த சத்தியங்களை அடுத்தடுத்த சத்சங்களில் பகிர்ந்து கொள்கின்றேன். இவ்வாறு நித்தியானந்தா கூறினார்.

    English summary
    Nithyananda speaks his earlier Life in Thiruvannamalai on Thursday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X