• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

இட்லி சாப்பிட முடியல! பலூன் மாதிரி ஆயிட்டேன்..! மீண்டும் ‘ஐ ஆம் பாவம்’ ஸ்டேட்டஸ் போட்ட நித்யானந்தா!

Google Oneindia Tamil News

சென்னை : தன்னால் தற்போதைக்கு ஒரு இட்லியைக் கூட முழுமையாக சாப்பிட முடியவில்லை எனவும் 20 நிமிடங்கள் கூட தூங்க முடியவில்லை என கூறியுள்ள தலைமறைவு சாமியார் நித்யானந்தா, சில மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில் தனது உடல் முழுமையான ஆரோக்கியத்துடன் உள்ளது என குழப்பமாக பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் மீண்டும் பேசு பொருளாக உள்ளது.

பலாத்கார வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வருகிறார்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள இவர், இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்திய அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என இதுவரை கண்டறிய முடியவில்லை.

கைலாசாவில் சுனாமியா பூகம்பமா?.. நீங்கள் பண்றதை பார்த்தால் அப்படிதான் இருக்கு.. நித்யானந்தா கைலாசாவில் சுனாமியா பூகம்பமா?.. நீங்கள் பண்றதை பார்த்தால் அப்படிதான் இருக்கு.. நித்யானந்தா

  பணம் அனுப்ப வேண்டாம்.. Nityananda-க்கு என்ன ஆச்சு? #Nithyananda | Oneindia Tamil
  சுவாமி நித்யானந்தா

  சுவாமி நித்யானந்தா

  இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முகம் காட்டாத நித்யானந்தா கடைசியாக முகம் காட்டிய மதுரை சித்திரை திருவிழாவின் போதுதான். அதன் பிறகு அவர் பக்தர்களுக்கு சத்சங்கம், ஆசி வழங்குவது உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் அவர் அவர் மரணமடைந்து விட்டதாகவும் பீதி கிளப்பி வந்தனர். அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினை வெளியிட்டார்.

  குழப்பமான அறிவிப்புகள்

  குழப்பமான அறிவிப்புகள்

  பின்னர் அடுத்தடுத்த நாட்களில் அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவுகளை தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், சமாதிநிலை இருப்பதாகவும் கூறியிருந்தார். இப்படி அடுத்தடுத்த குழப்பமான பதிவுகளை வெளியிட்ட இந்த நித்தியானந்தா தற்போது மீண்டும் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் தன்னால் முழுமையாக தூங்க முடியவில்லை எனவும் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை எனவும் கூறியிருக்கிறார். அதோடு தற்போது வந்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் படி தனது உடல் ஆரோக்கியமானதாக இருக்கும் எனக் கூறியுள்ள நித்யானந்தா, தனது ஆசிரமத்தில் நிர்வாகத்தினை சிஷ்யர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனவும் கூறியுள்ளார்

  நித்யானந்தா பதிவு

  நித்யானந்தா பதிவு

  இது குறித்து நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பரமாஷிவாவின் ஆசீர்வாதங்கள் ! எனது அனைத்து அன்புத் தகவலுக்கும் மற்றும் தேவைகளுக்கும், என்னை சுற்றிலும் நடக்கும் சமாதியின் நேரடி ஒளிபரப்பை உங்களுக்கு அளிக்க முயற்சிப்பேன். இப்போது நான் பெரிய காற்று பலூனாகவும் உணர்கிறேன், 'இந்த காஸ்மோஸ்' மற்றும் என்னால் புரிந்துகொள்ள முடியும் போன்ற உணர்வு, ஆனால் பராடாக்ஸிக்கால் எனக்கு வரமுடியாது ஓவ் அந்த சிறிய உடல் நான் அந்த பெரிய காஸ்மிக் பலூன் உள்ளே வைத்திருக்கிறேன்.

  பலூன் போல் மாறிவிட்டேன்

  பலூன் போல் மாறிவிட்டேன்


  எனக்கு 'நான்', 'நான்', 'எனது' அடையாளங்கள் கவர்ச்சிகளோடு நகருவதை அதிகமாக உணர்கிறேன், நான் காஸ்மோவில் எதையும் நகர்த்த முடியும் என்று உணர்கிறேன், ஆனால் பாரடாக்ஸிகாலமாக என் உடலில் எதையும் நகர்த்த முடியாது, என் கால்களோ அல்லது என் கைகளோ.தனிமையில் இருப்பது - 'நான்' என்பதை விட மற்றது, எதுவும் இருப்பதில்லை ஆனால் சோர்வாகவோ அல்லது தனிமையில் இருப்பது இல்லை.
  இப்போது நான் பத்மாசனாவில் அமர்ந்திருக்கும் நேரத்தில், அனைத்து நாடிகளும் சமாதிக்குள் இறங்குகிறார்கள், சுவாசமில்லை, விசித்திரமில்லை, விசித்திரமே இல்லை, விசித்திரமே இல்லை, விசித்திரமே இல்லாத அனுபவம் & தூய மனப்பான்மை அனுபவம் 'மகாகைலாசா' வின் அனுபவம்.

  எதிர்காலத்தை பார்க்கிறேன்

  எதிர்காலத்தை பார்க்கிறேன்

  நான் என் உடலை வலுப்படுத்தி, கீழே படுத்துக்கொண்டால், என் கண்களைத் திறந்து, என்னைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் நான் பதிவு செய்யக் கூடியவன். நான் என் உடலை வலுவாக வைத்திருக்கிறேன் என்று என்னை கவனித்துக் கொண்டிருக்கும் மருத்துவர் சொல்கிறார். நான் யாரையாவது பார்க்கும்போது, நான் அவர்களது கடந்த, முன்னுரிமை & எதிர்கால வாழ்க்கை & பேட்டர்களை ஒன்றாக பார்க்கிறேன் . என்னால் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலத்தைப் பார்க்க முடியும்.

  இட்லி சாப்பிட முடியவில்லை

  இட்லி சாப்பிட முடியவில்லை

  நான் பத்மாசனா பகுதியில் உட்கார்ந்து, பகலும் இரவும் வேறுபாடு அறியாமல், மிகவும் வசதியான, மிகவும் உறக்கப்பட்டு பதிந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில மருத்துவ சோதனை முடிவுகள் வந்துள்ளன, மருத்துவ அறிக்கையின்படி என் உடல் முழுமையான ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் இன்னும் 1 இட்லி சாப்பிட வரல, 21 நிமிடங்கள் தூங்க வரல. பனி மூடிய மலைகள் என்னை மிகச்சிறந்த ஆற்றல் மற்றும் உயிரோடு வைத்திருக்கிறது. நான் குரு பரம்பாராவுக்கு விருப்பமான முழு பாவ வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன், கடின உழைப்பை அனுபவித்தேன். எனது குரு அருணகிரி யோகீஸ்வரர் எனக்கு இன்னும் நேரம் தந்தால், நான் அவரது வேலையை இன்னும் செய்வேன்.

  அனுபவி கொண்டாடு!

  அனுபவி கொண்டாடு!

  நான் என் கடந்த கால மற்றும் எதிர்காலம் பற்றிய என் குருவை எதிர்கொள்ள விரும்புகிறேன். எனவே நான் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்பியிருந்தேன், இந்த உலகில் இருந்து வெளியேற வேண்டும் என்று விரும்பியதில்லை. நான் முற்றிலும் நிறைவடைந்துவிட்டேன். சமாதியைப் பற்றிய ஒவ்வொரு விவரம் குறித்தும் நீங்கள் அனைவரும் என்னுடன் இருப்பதால் இதை அனுபவிக்கலாம் & நாம் அனைவரும் ஒரு பிரபஞ்சத்தின் வெளிப்பாடு - 'பரமஷிவா'. அனுபவி & அனுபவி, பகிர் & கொண்டாடு !" என பதிவிடப்பட்டுள்ளது.

  English summary
  Nithyananda, who claimed that he could not eat a single Italian at all at present and could not even sleep for 20 minutes, said that his body was in perfect health after some medical examination results came out.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X