சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் 100 கிமீ வேகத்தில் காற்று வீசலாம்! நிவர் புயல் எவ்வளவு வேகமாக வருகிறது!

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் கூறினார்,.

வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , தென்மேற்கு வங்க கடலில் உருவான நிவர் புயல் கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

Nivar cyclone latest update from tamilandu weathermen: Wind speed may be 100kmph in Chennai

புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 310 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 370 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயல் தற்போது 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ,இன்று மாலை தீவிர புயலாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புயல் குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறுகையில். புயல் கரையை கடக்கும போது நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாதுதுரை, கடலூர், புதுச்சேரி, வில்லுபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தில் 110-120 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும்.

அதே நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 80 - 90 கி.மீ வேகம் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று இருக்கும். இன்று நள்ளிரவு அல்லது நாளை (வியாழக்கிழமை) அதிகாலை நிவர் புயல் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன" என்றார்..

சென்னையை புரட்டி எடுக்கிறது நிவர்.. விடாமல் பெய்யும் மழை.. எல்லா பக்கமும் தண்ணீர்.. தற்போது நிலவரம்!சென்னையை புரட்டி எடுக்கிறது நிவர்.. விடாமல் பெய்யும் மழை.. எல்லா பக்கமும் தண்ணீர்.. தற்போது நிலவரம்!

ஏற்கனவே தண்ணீரில் தத்தளிக்கும் சென்னையில், கனமழை இன்றும் தொடர்வதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இந்த சூழலில் சென்னையில் புயல் கரையை கடக்கும் போது ஒருவேளை 100 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசினால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

English summary
nivar cyclone will be 80kmph-90kmph gusting to 100kmph in Chennai, Tiruvallur, Kanchipuram and Tiruvarur districts. With the system moving slow, weather blogger Pradeep John said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X