சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடலூர் கரையை தொட்டது நிவர் புயலின் வெளிச் சுற்று.. பலத்த காற்று.. மழை

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. மணிக்கு 11 கி.மீ வேகத்தில் வந்த நிவர் இப்போது 16 கி.மீ என வேகம் பிடித்து முதலில் கடலூர் கரையை தொட்டுள்ளது. புயலின் வெளி வட்ட பகுதி கடலூர் கரையை தொட்டுவிட்டது. இதனால் பலத்த காற்று மற்றும் மழை பெய்து வருகிறது.

புயலின் முக்கிய பகுதியான கண் பகுதி கரையை தொட இரவு 10 அல்லது 11 மணியாகும் என்று கூறப்படுகிறது.

Nivar cyclones outer circle touched Cuddalore

இன்று மாலை 5 மணியளவில் கடலூரில் புயலின் வெளிச் சுற்று பாதை கடலூர் கரையை தொட்டுள்ளது. கடலூரையடுத்து, புதுச்சேரியில் வெளிச் சுற்று தொடும் என்று கூறப்படுகிறது.

வெளிச் சுற்று என்பது வேறு, புயல் கரையை தொட்டது என்பது வேறு என்பது முக்கியமானது. புயல் கரையை தொட இரவு 8 மணியாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் முழுமையாக கரையை கடந்து முடித்த அதிகாலை வரையில் ஆகலாம் என்ற ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு கொடுக்கக்கூடிய அறிவுறுத்தலை பொறுத்தவரையில் தாழ்வான பகுதிகளில் இருக்கக் கூடிய மக்களாக அங்கே இருந்து வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

English summary
Nivar storm has become a very severe storm. Nivar, which reached a speed of 11 kmph, has now reached a speed of 16 kmph and first touched the Cuddalore coast. The outer circle of the storm touched the coast of Cuddalore. Thus strong winds and rain are falling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X