சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையை நெருங்கும் நிவர்... தற்போது 250 கிமீ தூரம்.. திடீர் வேகம்.. மாற்றம் நிகழுமா?

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் தற்போது நிலை கொண்டுள்ளது. முன்னதாக 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த புயல் தற்போது 50 கிலோமீட்டர் முன்னோக்கி வந்துள்ளது. மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி 7 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து வந்த நிவர் புயல் தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த 6 மணி நேரமாக நகர்ந்து வருகிறது.

சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்திலும். கடலூரில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 190 கிலோமீட்டர் தூரத்திலும் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இப்படி ஒரு வேகம் நம்மூரில் எந்த புயலுக்கும் கிடையாது.. நாளுக்கு நாள் அதிகரிப்பு.. மிரட்டும் நிவர் இப்படி ஒரு வேகம் நம்மூரில் எந்த புயலுக்கும் கிடையாது.. நாளுக்கு நாள் அதிகரிப்பு.. மிரட்டும் நிவர்

இன்று நள்ளிரவு தொடங்கும்

இன்று நள்ளிரவு தொடங்கும்

ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம், நிவர் புயல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே 145 கிலோமீட்டர் வேகத்தில் இன்று நள்ளிரவு தொடங்கி நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்று எச்சரித்துள்ளது.

பாலச்சந்திரன் தகவல்

பாலச்சந்திரன் தகவல்

சற்று முன்னதாக இந்திய வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்திக்கும் போது, புயலின் வேகம் 110 கிலோமீட்டர் வேகத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

எங்கெல்லாம் மழை

எங்கெல்லாம் மழை

அதிகனமழையை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம்., செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால பகுதிகளிலும் இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

மாற்றம் இருக்குமா?

மாற்றம் இருக்குமா?

காற்றின் வேகத்தை பொறுத்தவரை புயல் கரையை கடக்கும் போது 145 கிலோமீட்டர் வேகம் இருக்கக்கூடும். தீவிர நிவர் புயல் அடுத்த ஆறு மணி நேரத்தில் அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என்று அண்மையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நிவர் புயல் கரையை நோக்கி வரும் வேகம் 7 கிலோமீட்டரில் இருந்து 11 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புயல் கரையை கடக்கும் நேரத்தில் பெரிய மாற்றம் இருக்காது. இன்று நள்ளிரவே கரையை கடக்க தொடங்கும் என்றும், நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே புயல் முன்பே கரையை கடக்க வாய்ப்பு இல்லை.

English summary
Nivar is currently 250 km from Chennai. The storm, which was previously 300 kilometers away, is now 50 kilometers ahead. Moving at a speed of 11 kilometers per hour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X