சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புயல் எச்சரிக்கை கூண்டு - துறைமுகங்களில் எந்த எண் கூண்டு ஏற்றினால் என்ன அர்த்தம் தெரியுமா

புயல் எச்சரிக்கை கூண்டுகளில் ஏற்றப்படும் எண்களுக்கு என தனித்தனியாக அர்த்தம் உள்ளது. மழையும் புயலும் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த எண்களை வைத்தே அறிந்து கொள்ளலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் புதன்கிழமை கரையை கடக்கப் போகும் நிலையில் கடலூர், புதுச்சேரியில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் சென்னை, எண்ணூரில் 6 ஆம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ஆம் எண் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. கடலில் புயல் உருவாகும் போது மீனவர்களையும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். இந்த புயல் கூண்டுகளில் ஏற்றப்படும் எண்களுக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்வோம்.

புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.

பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவார்கள். இந்த எச்சரிக்கைச் சின்னங்கள் ஒன்றில் துவங்கி 11 வரை உள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் மற்றும் மழைக் காலங்களில் விடுக்கப்படும் புயல் எச்சரிக்கை சின்னங்களுக்காக விளக்கங்களை பார்க்கலாம்.

கப்பல்களுக்கு எச்சரிக்கை

கப்பல்களுக்கு எச்சரிக்கை

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள். இரண்டாம் எண் கூண்டு, புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

கப்பல்களுக்கு ஆபத்து

கப்பல்களுக்கு ஆபத்து

3ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதை குறிக்கும்.

புயல் தாக்கும் பகுதிகள்

புயல் தாக்கும் பகுதிகள்

ஐந்தாம் எண் கூண்டு, புயல் உருவாகி இருப்பதை குறிக்கிறது. அதோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். ஆறாம் எண் புயல் கூண்டு ஏற்றினால் புயல் வலதுபக்கமாக கரையைக் கடக்கும் போது, துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படுத்தப்படும் என்பதை குறிப்பதாகும்.

அதி தீவிர புயல்

அதி தீவிர புயல்

ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். எட்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், மிகுந்த அபாயம் என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்.

துறைமுகம் அருகே கரையை கடக்கும்

துறைமுகம் அருகே கரையை கடக்கும்

ஒன்பதாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். 10ஆம் எண் கூண்டு ஏற்றப்படுமானால், அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கப்படுகிறது.

11ஆம் நம்பர் எச்சரிக்கை

11ஆம் நம்பர் எச்சரிக்கை

துறைமுகத்தில் கடைசியாக ஏற்றப்படும் 11ஆம் எண் கூண்டு தான் உச்சபட்சமானது. இது எதற்கு ஏற்றப்படுகிறது என்றால் வானிலை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

English summary
Cyclone warning and signals have separate meanings for numbers to be loaded. With these numbers you can know the extent of the impact of rain and storms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X