சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிவர் புயல் கோரத்தாண்டவம் - தாம்பரத்தில் 31.4 செமீ மழை பதிவு... எங்கெங்கு எவ்வளவு மழை

நிவர் புயல் எதிரொலியால் சென்னை தாம்பரத்தில் 31.4 செமீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 28 செமீ மழை பதிவாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் ஆடிய கோரத்தாண்டவத்தினால் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. தாம்பரத்தில் அதிகபட்சமாக 31.4 செமீ மழை பதிவாகியுள்ளது. புயலால் பெரிய சேதம் எதுவும் இல்லாவிட்டாலும் சென்னையிலும் புறநகர் பகுதிகளும் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நின்று நிதானமாக புதுச்சேரி அருகே அதி தீவிர புயலாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையில் மழை நிதானமாக பெய்தாலும் புறநகரில் காற்றும் மழையும் சூறையாடியது.

Nivar effect 31.4 cm rainfall recorded in Tambaram

கடலூர், புதுச்சேரியில் பேய் காற்றுடன் பெருமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பயிர்கள் சேதமடைந்தன. நள்ளிரவில் கரையை கடக்கத் தொடங்கிய புயல் நின்று நிதானமாக விடிகாலை 5 மணிக்குதான் கரையை விட்டு வெளியேறியது.

Nivar effect 31.4 cm rainfall recorded in Tambaram

நினைத்த மாதிரி இல்லை.. லேசாக தப்பித்த சென்னை.. ஆனாலும் நினைத்த மாதிரி இல்லை.. லேசாக தப்பித்த சென்னை.. ஆனாலும் "அங்குதான்" பிரச்சனை.. நிவரின் தாக்கம்!

புயல் கரையை கடந்தாலும் மழையின் தீவிரம் குறையவில்லை. பல பகுதிகளில் மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்தது. புயலினால் பெரிய அளவில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டாலும் குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

Nivar effect 31.4 cm rainfall recorded in Tambaram

சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் அதிக பட்சமாக 31.4 செமீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 28 செமீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 27.8 செமீ மழையும், கடலூரில் 27.5 செமீ மழையும் பதிவாகியுள்ளதாக வனிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடந்தாலும் உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    நிவர் கரையை கடந்து விட்டது.. இப்போது நிலைமை எப்படி இருக்கிறது ?

    English summary
    Heavy rains lashed Chennai and suburbs due to Hurricane Nivar. The maximum rainfall in Tambaram was 31.4 cm. Although there was no major damage from the storm, Chennai and its suburbs were inundated.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X