சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடுமையான சேதம்.. 5 மணி நேரத்தில் புரட்டி எடுத்த நிவர் புயல்..தமிழகத்தில் எங்கெங்கு எவ்வளவு பாதிப்பு?

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இருக்கும் பல்வேறு வடமாவட்டங்கள் கடுமையான சேதம் அடைந்துள்ளது.

Recommended Video

    நிவர் கரையை கடந்து விட்டது.. இப்போது நிலைமை எப்படி இருக்கிறது ?

    நிவர் புயல் ஒருவழியாக தமிழகத்தில் கரையை கடந்துள்ளது. இந்த புயல் கரையை கடந்தாலும் இன்னும் தமிழக எல்லையில்தான் இருக்கிறது.

    வேலூர் அருகே இந்த புயல் மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்த புயல் இன்னும் சில மணி நேரங்களில் ஆந்திராவிற்கு செல்லும்.

    நிவர் புயல் தாக்கம்.. நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறைநிவர் புயல் தாக்கம்.. நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

     எப்படி

    எப்படி

    நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இருக்கும் பல்வேறு வடமாவட்டங்கள் வெறும் 5 மணி நேரத்தில் கடுமையான சேதம் அடைந்துள்ளது. நிவர் புயல் புதுச்சேரி மரக்காணம் இடையே கரையை கடந்தது. மரக்காணம் பகுதியில் இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது.

     வடமாவட்டங்கள்

    வடமாவட்டங்கள்

    செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், விழுப்புரம், சென்னை, வேலூர், கடலூர் மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு வடமாவட்டங்களில் புயல் காரணமாக மரங்கள் விழுந்துள்ளது .சாலைகளில் மழையால் தண்ணீர் தேங்கி உள்ளது.

    வீடுகள்

    வீடுகள்

    குடிசை வீடுகள் பல சேதம் அடைந்து இருக்கிறது. மரங்கள் வேரோடு சாய்ந்தால் வடமாவட்டங்களில் சாலைகளில் பிளவு ஏற்பட்டுள்ளது. கடலூரில் இந்த புயலால் பெரிய அளவில் சேதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு சேதங்கள் இல்லை என்றாலும்.. அங்கும் அதிக அளவில் மரங்கள் விழுந்துள்ளது. விழுப்புரம், திருவள்ளூர் அதிக சேதம் அடைந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை

    சென்னை

    சென்னையில் பல்வேறு பகுதிகள் குளம் போல காட்சி அளிக்கிறது. தி நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு, கிண்டி, கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது

    மரங்கள்

    மரங்கள்

    சென்னை முழுக்க பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்து அப்படியே மரங்கள் பிளந்து உள்ளது. வேளச்சேரியில் சாலைகள் மற்றும் தெருக்களில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளது.அடையாறு எல்லை ஓர ஊர்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது.

    உண்மையான நிலவரம்

    உண்மையான நிலவரம்

    புயல் சேதம் குறித்து தற்போது வரை முதல் கட்ட விவரங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. புயலின் முழு பாதிப்பு குறித்த விவரங்கள் இனிதான் வெளியாகும். அரசு தரப்பில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியாகும்.

    English summary
    Nivar Storm: Chennai and Many Northern parts of Tamilnadu faces huge damages due to landfall.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X