சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நினைத்த மாதிரி இல்லை.. லேசாக தப்பித்த சென்னை.. ஆனாலும் "அங்குதான்" பிரச்சனை.. நிவரின் தாக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை பெரிய அளவில் நேரடியாக பாதிக்கவில்லை. நினைத்த அளவிற்கு சென்னையில் பாதிப்புகள் இல்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

Recommended Video

    நிவர் கரையை கடந்து விட்டது.. இப்போது நிலைமை எப்படி இருக்கிறது ?

    நிவர் புயல் ஒருவழியாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையை கடந்தது. இந்த புயல் அதி தீவிர புயலாக உருவெடுத்து கரையை கடந்தது.

    மொத்தமாக இந்த புயல் கரையை கடக்க 5 மணி நேரங்கள் ஆனது. புயல் கரையை கடந்த போது 145 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

    புதுச்சேரியை புரட்டிபோட்ட நிவர்.. முதல்வர் நாராயணசாமி வசிக்கும் வீட்டை சுற்றி சூழந்தது வெள்ளம்புதுச்சேரியை புரட்டிபோட்ட நிவர்.. முதல்வர் நாராயணசாமி வசிக்கும் வீட்டை சுற்றி சூழந்தது வெள்ளம்

     எப்படி இருக்கும்

    எப்படி இருக்கும்

    நிவர் புயல் காரணமாக சென்னை பெரிய அளவில் நேரடியாக பாதிக்கவில்லை. இந்த புயல் சென்னைக்கு அருகே விழுப்புரத்தில்தான் கரையை கடந்து உள்ளது. இதனால் சென்னைக்கு உள்ளே இருக்கும் பகுதிகள் பெரிதாக பாதிக்கப்படவில்லை. நினைத்த அளவிற்கு சென்னையில் பாதிப்புகள் இல்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

    மரங்கள்

    மரங்கள்

    ஆனாலும் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. சாலைகள் மூடப்பட்டுள்ளது. முக்கியமான சாலைகளில் வெள்ளம் வந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    குறைவு

    குறைவு

    தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையின் பெரும்பாலான சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. நேரடியாக புயல் மூலம் ஏற்பட்ட சேதங்கள் கொஞ்சம் குறைவுதான்.

    தப்பித்தது

    தப்பித்தது

    இந்த புயலின் பாதிப்பில் இருந்து சென்னை கொஞ்சம் தப்பித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.ஆனால் சென்னையில் சாலையில் இன்னும் மரங்கள் விழுந்தபடி கிடக்கிறது. இதை அகற்ற வேண்டும். பல இடங்களில் தண்ணீர் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தேங்கி பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    விழுப்புரம்

    விழுப்புரம்

    விழுப்புரத்தில் புயல் கரையை கடந்த காரணத்தால் சென்னையை விட சென்னையை ஓட்டி இருக்கும் செங்கல்பட்டு அருகாமை பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்குதான் அதிக அளவில் மரங்கள் விழுந்துள்ளது. அதேபோல் இங்குதான் அதிகமாக தண்ணீர் தேங்கி உள்ளது.

    இனி என்ன

    இனி என்ன

    நிவர் காரணமாக இனிதான் மழை அதிகம் பெய்யும். நிவர் விட்டு சென்ற காற்றின் விளைவால் மழை ஏற்படும். சென்னையில் இன்று தீவிர மழை பெய்யும். புயலுக்கு முன்பு ஏற்படும் பாதிப்புகளை புயலுக்கு பின்பு ஏற்படுத்தும் அதிக மழையும், பாதிப்பும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Nivar Storm: Chennai inner areas escaped, Surrounding areas faces hit due to storm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X