சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கெட்ட ஆட்டம் போடும் வானிலை.. நிவருக்கு பின்பும் தீவிர காற்று.. அடுத்த 6 மணி நேரம் என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் கரையை கடந்த பின்பும் தமிழகம் முழுக்க பலத்த காற்று வீசி வருகிறது. வடதமிழகத்தில் மிக அதிக அளவில் காற்று வீசி வருகிறது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது கரையான கடந்துள்ளது. கடுமையான சேதங்களை ஏற்படுத்திவிட்டு இந்த புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது.

புதுச்சேரி - மரக்காணம் இடையே அதிகாலை 2.30 மணிக்கு புயல் கரையை கடந்தது. அதிதீவிர புயலான இது முழுமையாக கரையை கடந்த 5 மணி நேரங்கள் வரை எடுத்தது.

நிவர் புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் திறப்பு நிவர் புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் திறப்பு

காற்று

காற்று

அதி தீவிர புயலாக உருவெடுத்த நிவர் தற்போது கரையை கடந்துள்ள நிலையில் ஆந்திர பிரதேசம் நோக்கி வடமேற்கு திசையில் சென்று கொண்டு இருக்கிறது. நிவர் புயல் கரையை கடந்த பின்பும் தமிழகம் முழுக்க பலத்த காற்று வீசி வருகிறது. வடதமிழகத்தில் மிக அதிக அளவில் காற்று வீசி வருகிறது. புயல் கரையைக் கடந்தாலும், பலத்த காற்று தொடர்ந்து வீசக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

வலுவிழக்கும்

வலுவிழக்கும்

தீவிரபுயல் அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறும். இன்னும் 6 மணி நேரத்தில் புயல் மொத்தமாக வலிமை இழக்கும். ஆனாலும் புயல் சென்ற பாதையில் காற்று தொடர்ந்து வீசும். தீவிரமான மழையும் பெய்யும் என்று வானிலையா மையம் கூறியுள்ளது. நிவரின் தாக்கம் இன்னும் 6 மணி நேரங்களுக்கு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

எங்கு காற்று

எங்கு காற்று

தற்போது வேலூர் , ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசி வருகிறது. புதுவையில் 55 கிமீ வேகத்திலும், சென்னையில் 60 கிமீ வேகத்திலும் காற்று வீசி வருகிறது.

தீவிரம் எடுக்கிறது

தீவிரம் எடுக்கிறது

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆந்திராவை ஒட்டி இருக்கும் தமிழக கிராமங்கள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதுகிகளில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு காற்று வீசி வருகிறது. புயலுக்கு பின்பான காற்று, மழை இரண்டும் தீவிரமாக பெய்து வருகிறது.

அடுத்த 6 மணி நேரம்

அடுத்த 6 மணி நேரம்

தமிழகத்தில் இருக்கும் வட மாவட்டங்கள் இதனால் கடுமையான சேதத்தை எதிர்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த 6 மணி நேரங்களுக்கு மிக தீவிரமாக காற்று வீச வாய்ப்புள்ளது. அதோடு மழையும் சேர்ந்து பெய்யும். முக்கியமாக புயல் சென்ற பாதையில் இருக்கும் பகுதிகள் அதிகம் பாதிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

English summary
Nivar Storm: Heavy gust and windflow in many parts of Tamilnadu after the landfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X