சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரிப்பணம் மட்டும் வேண்டுமா? நிவர் புயல் பற்றி இந்தியில் அப்டேட்.. சர்ச்சையில் இந்திய வானிலை மையம்!

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் குறித்து இந்திய வானிலை மையம் இந்தியில் அப்டேட் செய்தது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இதற்கு எதிராக தமிழக நெட்டிசன்கள் பலர் டிவிட்டரில் கொந்தளித்துள்ளனர்.

நிவர் புயல் நாளை அதிகாலை தமிழகத்தை கரையை கடக்க உள்ளது. அதிகாலை இரண்டு மணிக்கு புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரைக்கால் அருகே தற்போது 90 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டு உள்ளது. 13 கிமீ வேகத்தில் தற்போது புயல் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

மரக்காணம் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் நிவர் புயல்! முழுவதும் கடக்க நாளை காலை 10 மணியாகும்! மரக்காணம் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் நிவர் புயல்! முழுவதும் கடக்க நாளை காலை 10 மணியாகும்!

எப்படி

எப்படி

இந்த புயல் காரணமாக நேற்று முதல்நாள் இரவில் இருந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதல்நாள் தொடங்கிய மழை இப்போது வரை விட்டு விட்டு அதிரடியாக பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் இன்று பெய்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடும் நிலை ஏற்பட்டது.

இந்தியில் டிவிட்

இந்தியில் டிவிட்

இந்த நிலையில் நிவர் புயல் குறித்து இந்திய வானிலை மையம் இந்தியில் அப்டேட் செய்தது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. நேற்று மாலையில் இருந்து இரவு வரை டிவிட் செய்த இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் முழுக்க இந்தியில் மட்டுமே டிவிட் செய்தது. ஒரே ஒரு டிவிட் மட்டும் ஆங்கிலத்தில் செய்து இருந்த நிலையில் பிற டிவிட்கள் இந்தியில் செய்யப்பட்டது.

சட்டப்படி தவறு

சட்டப்படி தவறு

நிவர் புயல் சென்னை அருகே தமிழகத்தில் கரையை கடக்கிறது. இப்படி சென்னையை அருகே கரையை கடக்கும் புயல் குறித்து இந்தியில் அப்டேட் எதற்கு? என்று தமிழர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதுவும் ஆபத்து காலத்தில் இந்தியில் அப்டேட் எதற்கு. தமிழர்களுக்கு இந்தி தெரியாது என்று தெரிந்து.. தொடர்ந்து இந்தியில் புயல் குறித்து டிவிட் செய்து வருவது ஏன் என்று நெட்டிசன்கள் இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.

வரிப்பணம்

வரிப்பணம்

நாங்கள் வரிப்பணம் காட்டுகிறோம். தமிழர்களின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு..இப்படி அவசர காலத்தில் இந்தியில் டிவிட் செய்தால் என்ன நியாயம்? இது சட்டத்திற்கு எதிரானது. இந்திய அதிகாரபூர்வ சட்ட விதிகளுக்கு எதிரான செயல் இது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தை பலரும் விமர்சனம் செய்தனர். தமிழர்கள் பலரும் இந்திய வானிலை மையத்திற்கு எதிராக கொதித்து போனார்கள்.

நீக்கம்

நீக்கம்

இதனால் இந்தி திணிப்பிற்கு எதிராக #StopHindiImposition என்ற டேக்கும் இந்தியில் வைரலாக தொடங்கியது. இதை தொடர்ந்து இந்தியில் டிவிட் செய்வதை இந்திய வானிலை மையம் முற்றிலுமாக நிறுத்தியது. அதற்கு பின் ஆங்கிலத்தில் அடுத்தடுத்து டிவிட்களை செய்தது. தமிழர்களின் எதிர்ப்பை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் டிவிட் செய்யும் மொழியை மாற்றியது.

English summary
Nivar Storm: IMD gets schooled for Tweeting in Hindi on weather updates by Tamilians in Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X